World Biggest Ship சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ‘ராயல் கரீபியன்’ கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணக் கப்பல் இன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.
கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி மற்றும் இண்டர் மியாமி அணியினர் மூலம் இந்த கப்பலுக்கு ‘ஐகான் ஆப் தி சீஸ்’ (Icon of the Seas) என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டது.
கப்பலானது சுமார் 1,200 அடி (365 மீட்டர்) நீளம் கொண்டது. மொத்தம் 20 தளங்களைக் கொண்ட இந்த கப்பலில் 6 நீர் சறுக்குகள், 7 நீச்சல் குளங்கள், ஒரு பனி சறுக்கு வளையம், ஒரு தியேட்டர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்கள், பார்கள் மற்றும் ஓய்வறைகள் உள்ளன.இந்த கப்பலில் 2,350 பணியாளர்களுடன் அதிகபட்சமாக 7,600 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்
Kidhours – World Biggest Ship
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.