World Biggest Building பொது அறிவு செய்திகள்
பல கோடிகளில் செலவு செய்து கட்டப்பட்ட ஹோட்டல் ஒன்று, 25 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பது பலருக்கும் ஏன் என்ற கேள்வியை தரும். இதனால், இன்றுவரை இந்த ஹோட்டலுக்கு ஒரு விருந்தினர் கூட வரவில்லையாம். இப்போது அந்த ஹோட்டல் என்னவாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பார்ப்போம். வடகொரியாவில் இருக்கும் அந்த ஹோட்டல் இப்போது விளம்பரத்துக்காக மாபெரும் தொலைக்காட்சித் திரையாகப் பயன்படுத்தப்படுகிறது.
அந்த ஹோட்டலின் பெயர் Ryugyong என்பதாகும்.Dailystar அறிக்கையின்படி, வடகொரியாவின் தலைநகரான Pyongyang-ல் Ryugyong ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் ஆடம்பரமான வீட்டில் இருந்து சுமார் 12 மைல் (19.3 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது. இந்த வானளாவிய கட்டிடத்தின் உயரம் 1082 அடி. இதில் 3000 அறைகள் கட்டும் திட்டம் இருந்தது.
இது பொருளாதார மற்றும் அரசியல் சக்தியின் அடையாளமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்போது அதற்கு ‘ஹோட்டல் ஆஃப் டூம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலின் கட்டுமானம் 1987-ல் தொடங்கியது. பிறகு 2 வருடங்கள் கழித்து திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், இது உலகின் மிக உயரமான ஹோட்டலாக இருந்திருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக, பூமியின் மிக உயரமான காலியான கட்டிடம் என்ற சாதனையை இது பெற்றுள்ளது. இதை கட்டுவதற்கு 1.6 பில்லியன் பவுண்டுகள் செலவானது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வட கொரியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதால் 1997-ல் இதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது.
இந்த கட்டிடத்தில் ஜூலை 2011-ல் வெளிப்புற கண்ணாடி பேனல்கள் நிறுவப்பட்டன. இதற்குப் பிறகு, 2013-ஆம் ஆண்டுக்குள் இந்த ஹோட்டல் கட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் அது நிறைவேறவில்லை. இந்த ஹோட்டல் உள்ளே முற்றிலும் காலியாக இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இந்த கட்டிடத்தில் சில குறைபாடுகளும் உள்ளன. உதாரணமாக, லிப்ட் ஷாஃப்ட் ‘வளைந்து’ விடப்பட்டதாகவும், அதன் தளங்கள் சாய்வாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஹோட்டலின் அமைப்பு துருப்பிடித்து பலவீனமாகிவிட்டதாகவும் நம்பப்படுகிறது. 2018-ஆம் ஆண்டில், கட்டிடத்தில் எல்இடி பேனல்கள் நிறுவப்பட்டன. பின்னர் இது வட கொரிய அரசாங்க பிரச்சாரத்திற்கான மாபெரும் திரையாக மாற்றப்பட்டது.
Kidhours – World Biggest Building
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.