World Best Gold Water பொது அறிவு செய்திகள்
உலகில் விலை உயர்ந்த தண்ணீர் ஒரு பாட்டிலின் விலை 55 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த தண்ணீரில் 24 கேரட் தங்கத் துகள்கள் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2010 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர் என அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியானி பதிவு செய்யப்பட்டது.
ஃபிஜி நாட்டில் ஒரு நீரூற்றில் இருந்தும், பிரான்ஸ் இருந்து ஒரு நன்னீர் ஊற்றில் இருந்தும், ஐஸ்லாந்தின் பனிக்கட்டி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகிய மூன்றும் கலக்கப்பட்டு இந்த தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தில் 750 மில்லி லிட்டர் தண்ணீர் பேக்கேஜ் செய்யப்படுகிறது. மேலும் 5கிராம் சுத்த தங்கமும் தண்ணீரில் கலந்திருக்கிறது.

இதனால் தண்ணீர் அதிக காரத்தன்மையுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Kidhours – World Best Gold Water
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.