Kids GK News பொது அறிவு செய்திகள்
பிரித்தானியாவை சேர்ந்த 49 வயதான மார்க் ஓவன் எவன்ஸ் என்பவர் தனது மகளின் பெயரை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017ஆம் ஆண்டு சாதனை படைத்திருந்தார்.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார்.
இதனைத்தொடர்ந்து எவன்ஸ் விஜிலின் சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை படைக்க திட்டமிட்டார்.
இதன்படி, கின்னஸ் சாதனை அமைப்புக்கு தகவல் தெரிவித்து அதனடிப்படையில் 2 பச்சை குத்தும் கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குறித்த சாதனையை எனது மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என தந்தை தெரிவித்துள்ளார்.
![மகளின் பெயரை பச்சை குத்தி சாதனை Kids GK News 1 Kids GK News பொது அறிவு செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/09/Untitled-design_20230916_130852_0000.jpg)
இவ்வாறான நிலையில் இவரது சாதனைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Kidhours – Kids GK News
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.