Sunday, January 19, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புவிண்வெளியில் குப்பைகள் அதிகரிப்பு Space Debris

விண்வெளியில் குப்பைகள் அதிகரிப்பு Space Debris

- Advertisement -

Space Debris பொது அறிவு செய்திகள்

- Advertisement -

விண்வெளி குப்பைகள் அதிகரிப்பதன் காரணமாக விண்வெளியில் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கின்றனர் பிரிட்டனைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள்.

பரிணாம வளர்ச்சியடைந்து வரும் அறிவியல் துறை மாற்றங்கள், ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதில்லை. அதிவேக இணையதள வசதியுடன் உலகை இணைக்கும் பணிகளில் முனைப்பு காட்டுகின்றன வளர்ந்த நாடுகள். இதற்காக தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த உலக நாடுகள் தொடர்ச்சியாக பல செயற்கைக்கோள்களை அனுப்பி வருகின்றன.

- Advertisement -

இவ்வாறு அதிவேக இணைய சேவையயை வழங்குவதற்காக அனுப்பப்படும் செயற்கைகோள்கள் கீழ்புவி சுற்றுவட்டப்பாதையிலேயே நிலைநிறுத்தப்படுகின்றன. இதனை low Earth orbit (LEO) எனக்கூறுவர்.
அந்த வகையில் இந்த வருடம் விண்ணில் செலுத்துவதற்காக ஒன்வெப் நிறுவனத்தின் 550 செயற்கைகோள்கள், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் 3,500 செயற்கைகோள்கள், ஸ்டார்லிங்கின் 12,000 செயற்கைகோள்கள, அமேசான் க்யூபர் ப்ராஜக்ட்டின் 3,236 விண்கலங்களையும் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில்தான் பிரிட்டனைச் சேர்ந்த அறிவியலாளர்கள் விண்வெளி குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளனர். உலக நாடுகள் அனுப்பும் செயற்கைகோள்களின் பழுதான பாகங்கள், செயலிழந்த விண்கலன்கள், கைவிடப்பட்ட ஏவுகணை வாகன நிலைகள், விண்கலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திடப்படுத்தப்பட்ட திரவங்கள், திடமான ராக்கெட் மோட்டார்களில் இருந்து எரிக்கப்படாத துகள்கள் விண்வெளிக் குப்பைகள் என்று குறிப்பிடப்படுகிறது.

Space Debris பொது அறிவு செய்திகள்
Space Debris பொது அறிவு செய்திகள்

தற்போதைய சூழலில் கீழ்புவி வட்டப்பாதையில் 9,000 செயற்கைக்கோள்கள் இருப்பதாகவும் இது 2030-ம் ஆண்டுக்குள் 6,0000-மாக அதிகரிக்கும் என கூறுகின்றனர் பிரிட்டன் அறிவியலாளர்கள். மேலும் இவற்றால் ஏற்பட்டிருக்கும் 100 டிரில்லியன் அளவிலான விண்வெளி குப்பைகள் கீழ்புவி வட்டப்பாதையில் சுற்றி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

Kidhours- Space debris

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.