Santhiraayan 3 Return பொது அறிவு செய்திகள்
சந்திரயான்-3 விண்கலத்தின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததுள்ளதாகவும் அது வடக்கு பசிபிக் பெருங்கடலில் விழக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்3 ஐ அனுப்பியது.
புவி வட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, கடந்த மாதம் 23 ந் திகதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் வெற்றி பயணத்தை முடித்து கொண்டு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு பணிகளில் ஈடுபட்டது.
அதன் மூலம் கிடைத்த பல்வேறு தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.மேலும், நிலவின் தென் துருவத்தை ஆராய சென்ற முதல் நாடு என்ற சாதனையையும் அங்கிருந்து ஆய்வு செய்து தரவுகளை நாட்டுக்கு அனுப்பிய சாதனையையும் இந்தியா படைத்திருந்தது.
அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் பல ஆய்வுகளை மேற்கொண்டது.இதுதொடர்பான காணொளிகள், படங்களை இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தது. சந்திரயான்-3 திட்டமும் வெற்றி அடைந்தது.
இந்நிலையில், சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இஸ்ரோ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது.விண்கலம் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.நவம்பர் 15-ம் திகதி (நேற்று) இந்திய நேரப்படி மதியம் 2.42 மணியளவில் பூமியின் காற்று மண்டலப் பகுதிக்குள் நுழைந்தது.
புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம். வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
Kidhours – Santhiraayan 3 Return
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.