Russia Luna 25 Satellite பொது அறிவு செய்திகள்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது. இதேபோன்று, கடந்த 10 ஆம் தேதி, லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா விண்ணில் செலுத்தியது. சந்திரயானுக்கு முன்பாகவே, நாளை நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டது.
இதில், கடந்த 17 ஆம் தேதி லூனா விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. தொடர்ந்து, அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இறுதி சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்ப முடியாமல், தற்போதைய பாதையிலேயே லூனா-25 விண்கலம் சுற்றி வருகிறது. அதேவேளையில், கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு போட்டியாக பார்க்கப்பட்ட நிலையில், லுனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ரஷ்யா போன்று குறைந்த நாட்களில் விரைவாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பினால் இலக்கை எட்டுவது மிக கடினம் என்று, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்தியா போன்று நிலவின் நகர்வை நீண்ட நாட்கள் கணித்து அனுப்பப்படும் விண்கலம் இலக்கை துல்லியமாக அடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Kidhours – Russia Luna 25 Satellite, Russia Luna 25 Satellite trouble, Russia Luna 25 Satellite in tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.