Robotics Olympic பொது அறிவு செய்திகள்
சுவிஸ் நாட்டில் இடம்பெறும் உலக ரோபோ ஒலிம்பிக் போட்டியில் தாயகத்தை பூர்வீகமாக கொண்ட சிறுவன் ஒருவர் பங்கேற்கவுள்ளார்.
WRO என்னும் உலக ரோபோ ஒலிம்பிக் நிகழ்வில், சுவிஸ் ஆர்காவோ மாநிலத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஜெயமோகன் திவாகரன் என்னும் ,ஈழத்தை பூர்வீகமாக கொண்ட சிறுவனே பங்கேற்கவுள்ளார்.
எதிர்வரும் 15.5.2023ஆம் திகதி சுவிஸ்நாட்டில் செங்காளன் மாநிலத்தில் குறித்த போட்டி இடம்பெறவுள்ளது .
பல நாடுகளைச் சேர்ந்த , 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள். பங்கேற்க்கும் சிறுவர்கள் கணித பாடந்துறையில் திறைமை மிக்க , மாணவர்களாக இருந்திருக்கவேண்டும்.
அத்தகை
ய திறமையுள்ள , பிராந்திய மட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவரே ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகுவது வழமை.
அந்தவகையில் , யாழ்ப்பாணம் மீசாலையையும் , வடமராட்சி கம்பர்மலையையும் பூர்வீகமாகவும் கொண்ட , சுவிஸ் நாட்டில் வாழும் , ஜெயமோகன் திவாகரன் என்னும் சிறுவன் , உலக ரோபோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
குறித்த சிறுவனின் தந்தையார், முன்னாள் தேசநிர்மான உட்கட்டலுவல்கள் அமைச்சின் அலுவலர் என்பதுவும் , தாயார் சிரேஸ்ட தாதீய அலுவலர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஊடகங்களில் சிறுவன் தோன்றுவதற்கான அனுமதியை பெற்றோர்கள் , கடந்த சில மாதங்களுக்கு முன் , உலக ரோபோ ஒலிம்பிக்கழகத்திடம் வழங்கி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Kidhours- Robotics Olympic
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.