Protective City பொது அறிவு செய்திகள்
கனடாவின் பாதுகாப்பான நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் பேரி நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.கனடாவின் பெருநகர பகுதிகளின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரென்டோலா என்ற வாடகை தொடர்பான இணையதளம் ஒன்றினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலின் அடிப்படையில் மிகவும் பாதுகாப்பான நகரமாக பேரி நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டாவது பாதுகாப்பான நகரமாக பிராண்ட் போர்ட் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நகரின் பிரஜைகள் எண்ணிக்கைகளுக்கும் போலீஸ் உத்தியோகத்தகர்களுக்கும் இடையிலான விகிதம், வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை, குற்றச்செயல்களுக்கு தீர்வு காணப்படும் வீதம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றாரியோவின் குடியிலப் நகரம் மூன்றாவது பாதுகாப்பான நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்பு மிகவும் குறைந்த நகரமாக விண்ணிப்பிக் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Kidhours – Protective City
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.