New Species Discovered சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அருணாசலபிரதேச மாநிலத்தின் சாங்லாங், லோகித் மாவட் டங்களில் புதிய ‘இசைத்தவளை’ இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ‘நிடிரானா’ என்றபேரினத்தை சேர்ந்த இந்த தவளை, பிற தவளை இனங்களில் இருந்து தோற்றத்தா லும், செயல்பாடுகளாலும் பெரிதும் வேறுபட்டுள்ளது.
இதில் ஆண் தவளைகள் பலமாக ஒலி எழுப்புவதால் இவை இசைத்தவளைகள் என அழைக்கப்படுகின்றன. நோவாடிகிங் என்ற ஆற்றுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதால், ‘நோவா டிகிங் இசைத்தவளைகள்’ என இவற்றுக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது.

மேலோட்டமான நீர்நிலைகள், குளங்கள், சதுப்புநிலங்கள், வயல்வெளிகளில் இந்த தவளைகள் காணப்படுகின்றன.கூடு கட்டி முட்டை இடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றன இந்த இசைத்தவளை இனம், சீனா, ஜப்பான், தைவான். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் காணப்பட்டபோதிலும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என விஞ்ஞானிகள் தெரிவித்தன.
Kidhours – New species discovered
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.