Living Underwater Record பொது அறிவு செய்திகள்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர் நீருக்கடியில் அதிக காலம் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார்.
ஜோசஃப் டிடுரி என்ற அந்த ஆராய்ச்சியாளர், ஆழ்கடலில் முழுமையாக அடைக்கப்பட்ட அறை போன்ற வசிப்பிடத்தில், தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
அதன்படி நீருக்கடியில் தீவிர அழுத்தத்தில் வாழும் இந்த பரிசோதனை, எதிர்கால ஆழ்கடல் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் நீர்வாழ் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு கற்பிப்பதே இந்த பரிசோதனையின் குறிக்கோள் என்று டிடுரி கூறியுள்ளார்.

தொடர்ந்து 74 நாட்கள் நீருக்கடியில் இருந்துவரும் அவர், 100 நாட்களை இலக்காக கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
Kidhours- Living Underwater Record
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.