Human Library பொது அறிவு செய்திகள்
வலைத்தளங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நூலகம் இது. சில வருடங்களுக்கு முன்பு டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் இந்த மனித நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நூலகத்தில் புத்தகங்களுக்குப் பதிலாக, நூலகத்துக்கு வந்திருக்கும் மனிதர்களிடம் அவர்களின் கதைகளைக் கேட்கலாம்.
நூலகத்தில் புத்தகம் எடுத்து படிப்பதைப் போல, எந்த மனிதரை வேண்டுமானாலும் அணுகி அவர்களின் வாழ்க்கையை நாம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் மனம்விட்டு பேச வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடை யில் நல்ல உறவு ஏற்படுகிறது. இந்த மனித நூலகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, 80 நாடுகளில் புதிதாக மனித நூலகங்கள் உருவாகியுள்ளன.
Kidhours – Human Library
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.