Gold Mine Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது.
இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது திடீரென அந்த தங்கசுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டு சுரங்கம் முழுவதும் பரவியது.
இதனால் அங்கிருந்து தொழிலாளர்களால் உடனடியாக வெளியேர முடியாமல் தீ அவர்களை சூழ்ந்ததோடு விண்ணை முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டமும் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு உடல் கருகிய நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரு நாட்டு வரலாற்றில் மிக மோசமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours- Gold Mine Fire
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.