Earth in Risk பொது அறிவு செய்திகள்
பூமியின் முடிவைப் பற்றிய கணிப்புகள் பல முறை வெளிவந்துள்ளன. சிலர் இவற்றை நம்புகின்றனர், பலர் நம்புவதில்லை. ஆனால், நாசா எச்சரிக்கை விடுத்தால், பெரும்பாலான மக்கள் அதனை நம்புகிறார்கள் அல்லவா? அந்த வகையில், நாசாவின் எச்சரிக்கைகள் பல ஆண்டுகள் ஆராய்ந்த பிறகு வெளியிடப்படுவதால், பெரும்பாலானோர் அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு நாசா கணித்த ‘விண்வெளிப் புயல்’, தற்போது முன்கூட்டியே வரப் போகிறது என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.
விண்வெளியில் தொடர்ந்து பல புயல்கள் வந்தாலும், இந்த முறை வரவிருக்கும் புயல் பயங்கரமான விளைவுகளைத் தரும் என்று கூறப்படுகிறது. இந்தப் புயலின் தாக்கம் பூமியிலும் இருக்கப்போவதுதான் எச்சரிக்கை. இது பூமியில் பெரும் அழிவை ஏற்படுத்தவும் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சூரியனின் சோலார் மேக்னடிக் ஃபீல்டு இயக்கம் இருக்கும்போது, அது மிகவும் சக்திவாய்ந்த கதிர்வீச்சை விண்வெளியில் வெளியிடுகிறது என்பது விஞ்ஞானிகளின் கூற்றாக உள்ளது. இது ‘Solar Maximum’ என்று அழைக்கப்படுகிறது.
மேலும், அது பூமியை நோக்கி வேகமாகவும் நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளியில் வரும் இந்தப் புயலால் பூமியின் மின் கட்டமைப்பு பாதிக்கப்படும் என்றும், இதனுடன், விண்வெளியில் இருந்து பல செயற்கைக்கோள்களும் பூமியில் விழுந்து நொறுங்கும் என்றும் நாசாவால் கணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, சூரிய புயல் ஏற்படும் போதெல்லாம், சூரியனில் பயங்கர வெடிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர். இந்த முறை இந்த புயல் கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வரப்போகிறது என்று நாசாவின் ஜேம்ஸ் கூறியுள்ளார். இத்துடன் இன்னும் இது எவ்வளவு காலம் தொடரும் என்று கணிக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், முந்தைய புயல்களின் அடிப்படையில், இது சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பூமியில் இந்தப் புயலால் பல இயற்கைச் சீற்றங்களும் வரலாம் என்றும், இதனுடன் பல வகையான பிரச்சனைகளும் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சேதத்தின் உண்மையான வீரியம் இந்த புயல் அடிக்கும் போதுதான் தெரியவரும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Kidhours – Earth in Risk
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.