Cricket World Record சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 13 ஆவது போட்டியில் 1.25 மில்லியன் ரசிகர்கள் கலந்து கொண்டது உலக சாதனையாக மாறியுள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 13 ஆவது போட்டியில் பட்டம் வென்று அசத்தியுள்ளது அவுஸ்திரேலியா . 10 அணிகள் கலந்துகொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த ஒக்ரோபர் 5 ஆம் திகதி தொடங்கியது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட் டிக்கு தகுதி பெற்றன.
கிண்ணம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற் றது. இந்த ஆட்டம் உலகின் மிகப்பெரிய மைதானமான 1.30 இலட்சம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தேறியது. இந்த ஆட்டத்தில் வென்று 6 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது அவுஸ்திரேலியா.
இந்த ஆட்டம் உட்பட, இந்த உலகக் கிண்ண தொடர் முழுவ தையும் 1.25 மில்லியன் ரசிகர் கள் நேரில் கண்டுகளித்தனர். 45 நாட்கள் நடந்த இந்த தொடரை கிட்டத்தட்ட 12,50,307 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து பார்த்துள்ளனர். இது உலக சாதனையாக மாறியுள்ளது.
கடந்த 2015 இல் அவுஸ்தி ரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கிண்ண தொடரை 1,016 மில்லியன் மக்கள் பார்த் ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை இந்தியாவில் நடந்த உலகக் கிண்ண தொடர் முறியடித்துள்ளது. விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய ஐ.சி.சி. நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறி யுள்ளது.
இந்த தொடரின் ஆரம்பத் தில் பார்வையாளர்கள் குறை வாகவே வந்தனர். எனினும், இந்திய அணியின் ஆட்டங்க ளுக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் வருகை தந்ததால் இந்த அளவுக்கு எண்ணிக்கை கூடியுள்ளது. இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டியில் மட்டும் சுமார் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர் கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Cricket World Record , Cricket World Record update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.