countries of Without Airports
போக்குவரத்துத் துறையில் முக்கிய சேவையாக விமான சேவை காணப்படுவதுடன், ஒரு நாட்டில் இருந்து இன்னுமொரு நாட்டிற்கு செல்வதற்கு விமான போக்குவரத்து முக்கியமாக தேவைப்படுகிறது.
இந்த நிலையில், விமான நிலையமே இல்லாத நாடுகளும் உலகில் காணப்படுகின்றன. உலகில் உள்ள முக்கியமான 5 நாடுகளில் விமான நிலையங்களே இல்லை.
அன்டோரா
இந்த நாடு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ளது. விமான நிலையம் தேவைப்படாத அளவிற்கு இது மிகவும் சிறிய நாடு ஆகும்.
அன்டோரா நாட்டில் விமான நிலையம் இல்லாமைக்கு நிலப்பரப்பே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அதைவிட மிக உயரமான மலைகள் இந்த நாட்டை விமான நிலையம் அமைக்க தகுதியற்ற நாடாக மாற்றி இருக்கின்றது.
3000 மீட்டர் உயரமான மலைக் குன்றுகள் நாட்டை சூழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆகையால், இந்த நாடு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் விமானங்களை நம்பி இருக்கிறது.
லிச்சென்ஸ்டீன்
அதிக மலைகளைக் கொண்டிருப்பதாலும், மிகச் சிறிய நிலப்பரப்பைக் கொண்டிருப்பதாலும் இந்த நாட்டில் விமானம் நிலையம் இல்லை.
ஒட்டுமொத்தமாகவே இந்த நாடு 75 கிலோ மீட்டர் பரப்பளவை மட்டுமே கொண்டிருக்கின்றது.
முக்கியமான விடயம், இந்த நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. ஆனால் விமானம் நிலையம் ஒன்று கூட இல்லை.
ஆகையால், அயலில் உள்ள நாடுகளின் விமான சேவைகள் மூலமாகவே இந்த நாட்டிற்கு பயணிக்க முடியும்.
சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியே லிச்சென்ஸ்டீனுக்கு மிக நெருக்கமான நாடுகளாக உள்ளன.
மொனாக்கோ
உலகின் இரண்டாவது மிக சிறிய நாடு இதுவாகும். பிரான்ஸ் நாட்டுடன் இது தன்னுடைய எல்லைப் பகுதிகளை பகிர்ந்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நாட்டின் மூன்று பக்கமும் பிரான்ஸின் எல்லைப் பகுதி சூழ்ந்திருக்கும்.
எனவே மொனாக்கோ நாட்டிற்கு செல்ல பிரான்ஸ் நாடுகளில் உள்ள விமான நிலையங்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது.இதன் சிறிய நிலப்பரப்பு தனி விமான நிலையம் அமைப்பதற்கு முடியாமல் உள்ளது, இந்த நாட்டிற்கு என தனியாக எந்தவொரு விமான நிலையமும் இல்லை.
இந்த நாடும் பிரான்ஸ் விமான சேவைகளையே பயன்படுத்துகிறது.
சான் மரினோ
உலகின் மிகவும் பழைமையான நாடுகளில் இதுவும் ஒன்றாகும். முற்றிலும் இத்தாலியால் இந்த நாடு சூழப்பட்டுள்ளது.
இந்த நாட்டிற்கு கடல் மார்க்கம் இல்லை, மிக குட்டியான நாடு இது என்பதால் விமான நிலையம் இல்லை.
ஆகையால், இத்தாலிக்கு சென்று அங்கிருந்தே சான் மரினோவிற்கு செல்ல வேண்டும்.
இத்தாலியின் எந்த விமான நிலையத்திற்குச் சென்றாலும் அங்கிருந்து சான் மரினோவிற்கு பயணிக்க முடியும்.
வத்திக்கான்
உலகின் மிக சிறிய நாடு இது ஆகும், மிகவும் குறைவான மக்கள் தொகையையே இந்த நாடு கொண்டிருக்கின்றது.
போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் இந்த நாட்டில் விமானம் நிலையம் இல்லை.
இதேவேளை, இதன் அயல் நாடுகள் வத்திகான் நகருக்குள் நுழைவதற்கான போக்குவரத்து சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆகையால், வத்திக்கான் செல்ல விரும்புவோர் அதன் அயல் நாடுகளில் உள்ள விமான நிலையங்களைப் பயன்படுத்தி அந்நாட்டுக்கு செல்கின்றனர்.
குறிப்பாக சியம்பினோ மற்றும் பியூம்சினோ ஆகிய நாடுகளின் வாயிலாக வத்திகானுக்கு செல்ல முடியும்.
இல்லையெனில் இங்கிருந்து புகையிரதத்தின் மூலம் வெறும் 30 நிமிடங்களில் வத்திகானுக்கு சென்று விட முடியும்.
Kidhours – countries of Without Airports
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.