City Ice Sculptures உலக காலநிலை செய்திகள்
2024 ஆம் ஆண்டுக்கான ஹார்பின் சர்வதேச பனி மற்றும் சிற்ப விழா இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது.
வடகிழக்கு சீனாவின் ஹய்லாங்ஜியங் மாகாணத்தின் (Heilongjiang province) தலைநகரான ஹார்பின் நகர் ஒரு குளிர்ப்பிரதேசமாகம்.
இங்கு, டிசம்பர், ஜனவரியில் கடும் குளிர் நிலவும். இந்த மாதங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை −17.3 °C ஒட்டி இருக்கும்.இந்த குளிரில், ஆண்டுதோறும் பனி சிற்பம் மற்றும் கண்காட்சி திருவிழா நடத்தப்படுகிறது.பனிசிற்ப போட்டியில் உலகநாடுகளைச் சேர்ந்த பல்வேறு குழுவினர் பங்கேற்று தங்கள் ஆக்கங்களை காட்சிப்படுத்தினர்.

இந்த பனி சிற்ப விழாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
முதலில், உள்நாட்டு சிற்ப கலைஞர்கள் மட்டுமே கலந்து கொண்டு வந்த நிலையில், தற்போது சர்வதேச கலைஞர்களையும் இந்த விழா ஈர்த்து வருகிறது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பனி சிற்ப விழாவின் ஏற்பாடுகளில் பங்கேற்று மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.சுற்றுலா பயணிகளுக்கு இது தரும் அனுபவங்களும், வாய்ப்புகளும் எல்லையற்றவையாக உள்ளன. மனித அனுபவங்கள் தான் ஓவியங்களாக, சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
இதை பார்க்கும் போது, பல சிக்கல்களுக்கு உள்ளான நமது மனம் விடுதலை அடைவது போல் உணர்கிறது.
சீனாவுடன் உலகின் பல்வேறு நாடுகள் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள இதுபோன்ற அழகியல் ரீதியிலான உருவாக்கங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
Kidhours – City Ice Sculptures
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.