Canada Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15-06-2023) இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.கார்பெர்ரி நகருக்கு அருகில் ட்ரக் வண்டி ஒன்றும் மினி வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வின்னிபெக்கிற்கு மேற்கே இரண்டு மணிநேரம் தொலைவில் உள்ள கார்பெரிக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலை 1 மற்றும் நெடுஞ்சாலை 5 இல் இந்த விபத்து நடந்துள்ளது.விபத்தையடுத்து குறித்த நெடுஞ்சாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Kidhours – Canada Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.