Almond Producing Countries சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கணிசமான பங்கை பாதாம் பருப்பு வகிக்கின்றன.
ஆரோக்கியமான கொழுப்புகள், விட்டமின்கள், மினரல்கள், ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் போன்றவை பாதாம் பருப்பில் உள்ளன.
இரவு முழுவதும் ஊற வைத்த பாதாம் பருப்புகளை, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புச் சத்தை தரக் கூடியது. விட்டமின் E சத்து இதில் நிறைவாக உள்ளது. பாதாம் பருப்புகளை சாப்பிடுவது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது.
இவ்வாறு பல பயன்களையும் அதிக கேள்வியுமுடைய பாதாம் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.
முதலாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. மற்ற அனைத்து நாடுகளின் உற்பத்தியையும் ஒன்று சேர்த்தால் கூட அமெரிக்காவை மிஞ்ச முடியாது.
இரண்டாவது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. 2 லட்சம் டன் அளவை தாண்டி பாதாம் பருப்பு உற்பத்தி செய்யும் இரண்டே நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும். இங்கு 2,02,339 டன் அளவுக்கு பாதாம் உற்பத்தி இருக்கிறது.
மூன்றாவது இடத்தில் ஈரான் உள்ளது. வெப்ப மண்டல பகுதிகளில் ஒன்றாக ஈரானில் 1,47,863 தொன் அளவுக்கு பாதாம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
நான்காவது இடத்தில் மொரோக்கோ உள்ளது. லட்சத்தை தாண்டிய தொன் அளவில் பாதாம் உற்பத்தி செய்யும் நாடுகளில் மொரோக்கோவும் ஒன்று. இங்கு 1,12,681 தொன் அளவு பாதாம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஐந்தாவது இடத்தில் சிரியன் அரேபிய குடியரசு உள்ளது. ஆண்டுக்கு 88,841 தொன் அளவுக்கு பாதாம் பருப்பு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆறாவது இடத்தில் துருக்கி நாடு உள்ளது. அங்கு சுமார் 85,000 தொன் அளவுக்கு துருக்கியில் பாதாம் பருப்பு உற்பத்தியாகிறது.
ஏழாவது இடத்தில் இத்தாலி நாடு உள்ளது. இங்கு பாதாம் உற்பத்தியானது 74,584 தொன் என்ற அளவில் உள்ளது.
எட்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா நாடு உள்ளது. அங்கு ஆண்டுக்கு 72,902 தொன் அளவுக்கு பாதாம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒன்பதாவது இடத்தில் அல்ஜீரியா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 66,095 தொன் அளவுக்கு பாதாம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பாதாம் உற்பத்தியில் 10ஆம் இடத்தில் உள்ள நாடு துனிஷியா ஆகும். இங்கு ஆண்டுக்கு 61 ஆயிரம் தொன் அளவுக்கு பாதாம் உற்பத்தி செய்யப்படுகிறது.
உலக பாதாம் உற்பத்தி நாடுகளின் பட்டியல்
1.முதலாவது இடத்தில் அமெரிக்கா
2.இரண்டாவது இடத்தில் ஸ்பெயின்
3.மூன்றாவது இடத்தில் ஈரான்
4.நான்காவது இடத்தில் மொரோக்கோ
5.ஐந்தாவது இடத்தில் சிரியன் அரேபிய குடியரசு
6.ஆறாவது இடத்தில் துருக்கி
7.ஏழாவது இடத்தில் இத்தாலி
8.எட்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா
9.ஒன்பதாவது இடத்தில் அல்ஜீரியா
10.10ஆம் இடத்தில் துனிஷியா
Kidhours – Almond Producing Countries
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.