Sunday, February 2, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகின் 8 ஆவது கண்டம் இதுதான்..... விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 8th Continent of the...

உலகின் 8 ஆவது கண்டம் இதுதான்….. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 8th Continent of the World

- Advertisement -

8th continent of the world  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து.கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.

- Advertisement -
8th continent of the world  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
8th continent of the world  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஜீலந்தியா கண்டமானது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது.இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், முன்னதாக பாறை மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

புதிய கண்டம் மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனுடன் சேர்த்து உலகில் மொத்தம் 8 கண்டங்கள இருப்பதாக புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அந்தவகையில் உலகில் தற்போது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய 7 கண்டங்கள் உள்ள நிலையில், விரைவில் இந்த புதிய கண்டத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Kidhours – 8th continent of the world

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.