Saturday, January 18, 2025
Homeகல்விசமயம்நவராத்திரியின்போது பூண்டு, வெங்காயத்தை தவிர்ப்பது ஏன்? Navarathiri Discipline 

நவராத்திரியின்போது பூண்டு, வெங்காயத்தை தவிர்ப்பது ஏன்? Navarathiri Discipline 

- Advertisement -

Navarathiri Discipline

- Advertisement -

உலகம்  முழுவதும் கொண்டாடப் “டும் பண்டிகைகளுள் ஒன்று நவ ராத்திரி. பலரும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு நடத்துவார்கள். விரதம் இருந் தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதற்கு ஏற்ப உணவுக்கட்டுப்பாடுகளை கடைப் பிடிப்பார்கள். சில உணவுப்பொருட்களை அறவே தவிர்ப்பார்கள். பெரும்பாலும் அசைவத்தை தவிர்க்கும் நிலையில் பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

நவராத்திரியின் போது பூண்டு, வெங்காயத்தை தவிர்ப்பதற்கு காரணங்களும் இருக் கின்றன. இந்து மதத்தில் உணவுப்பொருட்கள் ராஜசம், தமாசம், சாத்வீகம் என மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சாத்வீக உணவுகள் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

- Advertisement -
Navarathiri Discipline 
Navarathiri Discipline

பழங்கள், காய்கறிகள். பால் பொருட்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி அல்லாத புரத உணவுகள் சாத்வீக உணவுகளாக குறிப்பிடப்படு கின்றன. இவற்றை சாப்பிடுவதன் மூலம் மனதை அடக்க முடியும். சகிப்பு தன்மை, கருணை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இயல்பாகவே வெளிப்படவும் செய்யும். உடலுக் கும், மனதுக்கும் புத்துணர்ச்சியையும் அளிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை விரைவாக நீக்கும்.

- Advertisement -

விரதத்தின்போது சாத்வீக உணவுகளை உட்கொண் டால் எளிதில் ஜீரணமாகும். அதனால் சாப்பிட்ட உண வுகள் செரிமானமாவதற்கு குறைந்த நேரமே செலவா கும். அதனால் குடல் இயக்கங்களுக்கு ஓய்வு கிடைக் கும். உடலும் சோர்வின்றி இருக்கும். மேலும் சாத்வீக உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். மன நலனை யும் மேம்படுத்தும். அதனால்தான் நவராத்திரியின் போது சாத்வீக உணவுகளை சாப்பிடுவதற்கு பரிந் துரைக்கிறார்கள்.

ஆயுர்வேதத்தின்படி வெங்காயம், பூண்டு இவை இரண்டும் தாமசம் வகை உணவுக ளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை உணவுகள் மனம், ஆன்மாவிற்கு இடையூறு ஏற்படுத்ததக்கூடியவையாக குறிப்பிடப்படுகின்றன. உணர்ச்சிகள், ஆசைகளை தூண்டுவது, பேராசை கொள்ள வைப்பது, மந்தநிலை, மனச் சோர்வு அடைவது போன்ற குணங் களை தூண்டக்கூடியவையாக கரு தப்படுகின்றன.

வெங்காயத்தை பொறுத்தவரைஉடல் உஷ்ணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. பூண்டு உணர்ச்சிகளை,ஆசைகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் எதிர்மறையாக செயல்படக்கூடியது.

அதனால் நவராத்திரி விரதத்தின்போது அவைகளை உட்கொள்வது நல்லதல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.