NASA Photos of Saturn சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நம்முடைய பிரபஞ்சத்தின் அதிசயமான நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறது. இப்படி வெளியாகும் பல புகைப்படங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். குறிப்பாக நாசா வெளியிடும் பல புகைப்படங்கள் விண்வெளி ஆர்வலர்களை வசியம் செய்யக்கூடியது என்றே சொல்லலாம். அதுவும், கல்வி சார்ந்த வீடியோக்கள் மற்றும் நம்முடைய பூமி, விண்வெளி போன்றவற்றின் அற்புதமான புகைப்படங்களை பார்க்க விரும்புகிறவர்களுக்கும் நாசாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் சிறந்த தேர்வாக இருக்கும்.

முதல் படத்தின் மேல் இடதுபுறத்தில் பளிச்சென வெள்ளை நிறத்தில் வெள்ளி கிரகம் இருக்கிறது. அப்படியே வெள்ளி கிரகத்தின் மேலே குறுக்குவெட்டாக சிவப்பு நிற புள்ளி தெரிகிறதா? அதுதான் செவ்வாய் கிரகம்.
இரண்டாவது படத்தில் பூமியும் நிலவும் தெரிகிறது. இதில் வெளிர் நீல நிற புள்ளியாக நம்முடைய பூமியும், அதற்கு கீழ் வலது பக்கத்தில் இன்னும் சிறிய புள்ளியாக நிலாவும் தெரிகிறது.

சனி கிரகத்தை இவ்வுளவு நெருக்கமாக புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் காசினி அல்ல. இதற்கு முன்பே 44 வருடங்களுக்கு முன்பு சூரியக் குடும்பத்தை ஆராய்ச்சி செய்ய வழிவகை செய்த Pioneer 11 விண்கலம்தான் முதன்முதலில் சனி கிரகத்தை மிக நெருக்கமாக புகைப்படம் எடுத்தது
இதற்கு முன்பாக ஜூலை மாதமும் சனி கிரகம் மற்றும் அதனுடைய நிலவான மிமாஸின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது காசினி விண்கலம்.
நாசா பகிர்ந்திருந்த அந்த புகைபடத்தில் சனிக் கிரகத்தின் பெரும் பகுதியும் அதன் வளையமும், சற்று தொலைவில் அதனுடைய நிலவும் தெரிந்தது. வாயுக்கள் நிரம்பிய சனி கிரகத்தின் வளி மண்டலம், காந்த மண்டலம், நிலவு மற்றும் வளையம் ஆகியவற்றை ஆய்வு செய்த போது இந்த புகைப்படத்தை காசினி விண்கலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
KIdhours – NASA Photos of Saturn
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.