Sunday, February 23, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புநிலவின் தென்துருவத்தை ஆராய நாடுகள் ஏன் போட்டிபோடுகின்றன எண்டு தெரியுமா ? Moon South Pole

நிலவின் தென்துருவத்தை ஆராய நாடுகள் ஏன் போட்டிபோடுகின்றன எண்டு தெரியுமா ? Moon South Pole

- Advertisement -

Moon South Pole  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலக நாடுகள் ஏன் போட்டி போடுகின்றன. விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் சாமானியர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விண்ணுலக மர்மம் நிலவு. நிலவை ஆராய்ச்சி செய்ய பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அதிலும் நிலவின் தென்துருவம், விஞ்ஞானிகளின் ஆர்வத்தை தூண்டும் கவர்ச்சிகரமான ஒரு பகுதியாகும்.

இதற்கு காரணம், கோடிக்கணக்கான ஆண்டுகளாக வெளிச்சமே படாத பகுதி என்பதே. நிலவின் தென்துருவம், நிரந்தரமாக சூரியனுக்கு மறைவாகவே இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று.மேலும் இங்கு நிலவும் தட்பவெட்ப நிலை மைனஸ் 203 டிகிரி செல்சியசாக இருப்பதும் விஞ்ஞானிகளை ஆராய்ச்சி மேற்கொள்ள தூண்டும் முக்கியமான காரணியாகும். நிலவின் தென்பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள், இருப்பதும் இவை பல கிலோ மீட்டர் தொலைவு வரை பரவிகிடப்பதும் விஞ்ஞானிகளை ஈர்த்த ஒன்று.

- Advertisement -

இந்த பள்ளங்கள் மிகப்பெரிய குளிர் பொறிகளாகும், அவை ஆரம்பகால சூரிய குடும்பத்தில் இருந்து ஹைட்ரஜன், நீர் பனி மற்றும் பிற ஆவியாகும் பொருட்களின் புதைபடிவ பதிவைக் கொண்டிருக்கின்றன. இவை பல கோடி ஆண்டுகளாக மாற்றங்களை கண்டிராதவை என்றும், இதன் மூலம் சூரிய குடும்பம் உருவானது தொடர்பான கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

- Advertisement -
Moon South Pole  பொது அறிவு செய்திகள்
Moon South Pole  பொது அறிவு செய்திகள்

நிலவின் தென்துருவத்தை அடைய பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. இதில் முதல் வெற்றியை பதித்தது இந்தியா தான். 2008- ஆம் ஆண்டு சந்திரனை ஆராயச் சென்ற சந்திரயான்- 1 விண்கலம். நிலவின் தென் பகுதியில் உள்ள ஷேக்லெடன் பள்ளத்தில் வெற்றிகரமாக தடம் பதித்தது. ஷேக்லெடன் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பதையும் உலகுக்கு உணர்த்தியது.
தற்போது நிலவின் தென்துருவத்தை அடைய இந்தியாவின் சந்திரயான்- 3 விண்கலமும், ரஷ்யாவின் லூனா- 25 விண்கலமும் போட்டி போட்டுக்கொண்டு களம் இறங்கியுள்ளன. இதில் வெற்றி யாருக்கு என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

 

Kidhours – Moon South Pole,  பொது அறிவு செய்திகள்

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.