Tuesday, December 3, 2024
Homeசிறுவர் செய்திகள்ஆய்வில்அதிர்ச்சி தகவல் - ஆண் இனம் அழியப் போகின்றதா? Male Race is Going...

ஆய்வில்அதிர்ச்சி தகவல் – ஆண் இனம் அழியப் போகின்றதா? Male Race is Going Extinct

- Advertisement -

Male Race is Going Extinct  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தற்போது உலகில் ஆண்களை பெண் பாலினரே அதிகரித்து வருவதாக நாடுகளின் சனத்தொகையில் தென்படுகின்ற நிலையில் தற்போது ஆண் இனமே அழிந்து போகும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது ஒரு பெண் கருத்தரித்த 12 வாரங்களில் பாலினத்தை நிர்ணயிக்கும் பகுதியான Y குரோமோசோமின் முதன்மை மரபணு ஒரு ஆண் இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்குவதற்கு மரபணு பாதையை செயல்படுத்துகிறது இயற்கை

- Advertisement -

இந்த மரபணு மற்றொரு முக்கிய மரபணுவான SOX9 தூண்டுவதன் மூலம் செயல்படுகிறது இது இந்த குழந்தை ஆணாக வளர்வதை உறுதி செய்கிறது.அந்தவகையில், இந்த Y க்ரோமோசோம் குறைந்து வருவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

- Advertisement -

அதாவது, கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் அதன் சொந்த 1438 மரபணுக்களில் 1393 ஐ இழந்துவிட்டதாக மரபியல் பேராசிரியரான ஜெனிபர் ஏ. மார்ஷல் கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார் மீதமுள்ள மரபணுக்களும் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் இழந்துவிடலாம் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகையால், இன்னும் 10 மில்லியன் அண்டுகளின் பின்னர் முழுவதுமாக ஆண்கள் இனம் அழிந்துவிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஆய்வுக்கு ஜப்பானில் நடத்தப்பட்ட ஸ்பைனி எலி குறித்த ஆராய்ச்சி ஆறுதல் அளித்துள்ளது.அதாவது, Y க்ரோமோசோம் இல்லாத ஸ்பைன் எலியின் ஆண் பாலினத்தை மீட்டெடுக்க ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில் Y க்ரோமோசோம் நகர்ந்து மற்ற க்ரோமோசோம்களுடன் இணைந்தது தெரியவந்துள்ளது.

Male Race is Going Extinct  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Male Race is Going Extinct  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

முக்கியமாக குரோமோசோம் 3 ல் உள்ள SOX9 மரபணுவுக்கு அருகில் உள்ள டிஎன்ஏ நகல் இது ஆண்களிடம் மட்டும் உள்ள மரபணு அத்தோடு இது பெண்களிடம் இல்லாதது.அதனால் காணாமல் போன Y குரோமோசோமின் SRY மரபணுவின் பங்கை இது எடுத்துகொள்கிறது இதனால் Y க்ரோமோசோம் இல்லையென்றாலும் கூட அந்த இனத்தை அழியவிடாமல் தடுப்பதற்கு வழி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இன்னும் மனிதர்களுக்கு இது செயல்படுத்திப் பர்க்கவில்லை என்பதால் எதையும் இறுதியாக சொல்லிவிட முடியாது எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒருவேளை 10 மில்லியன் ஆண்டுகளுக்கு பின் ஆண் இனம் அழிந்துவிட்டால் அது மனித இனம் அழிவதற்கான முக்கிய புள்ளி என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Male Race is Going Extinct

 

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.