Live in Space பொது அறிவு செய்திகள்
சிவிலியன் ஒருவர் உட்பட மூவரை சீனா (30) இன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
ஷெங்ஸோ -16 பயணத்திட்டத்தின் மூலம், ஸெங்ஸோ விண்கலத்தில், சீனாவின் தியான்கோங் விண்வெளி நிலையத்தை நோக்கி இவர்கள் அனுப்பப்பட்டனர்.
சீனாவின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள ஜியூகுவான் செய்மதி ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.31 மணிக்கு இவர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.
ஜிங் ஹெய்பெங் தலைமையிலான இக்குழுவில், பொறியியலாளர் ஸு யாங்ஸு, மற்றும் சீனாவின் முதல் சிவில் விண்வெளியாளராக பேராசிரியர் குய் ஹெய்சாவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளை சிவிலியன் ஒருவரை சீனா விண்வெளிக்கு அனுப்பியுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இவர்களை விண்வெளிக்கு ஏவும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் விண்வெளியாளர்கள் அனைவரும் சிறந்த நிலையில் உள்ளனர் எனவும், மேற்படி ஏவுதளத்தின் பணிப்பாளர் Nh லீபெங் கூறினார்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சீனாவின் 4 ஆவது பயணம் இதுவாகும். ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்ததாக சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய 3 ஆவது நாடு சீனா ஆகும்
இதேவேளை 2030 இறுதிக்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Live in Space
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.