France Award to Tamils பொது அறிவு செய்திகள்
பிரான்ஸில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை ஈழத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா வென்றிருக்கிறார்.
La meilleure baguette de Paris என்பது இப் போட்டியின் பெயர் ஆகும் . தமிழில் ‘பரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும்.
30 வது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டியில், இம்முறை 126 பேர், பிரான்சின் பாரம்பரியம்மிக்க baguette பாணை தயாரித்து போட்டிக்கு அனுப்பியிருந்தனர்.
இதில் 30 வயதான தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து, முதல் பரிசை வென்றிருக்கிறது. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிட்டியுள்ளது.
இந்நிலையில் போட்டியில் வெற்றபெற்றதோடு மட்டுமல்லாது பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மாளிகைக்கான பாண் தாயாரிக்கும் சந்தர்ப்பத்தையும் பெற்ற ஈழத்தமிழருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Kidhours – France Award to Tamils
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.