Wednesday, December 18, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புநேட்டோவில் இணையும் பின்லாந்து Finland NATO

நேட்டோவில் இணையும் பின்லாந்து Finland NATO

- Advertisement -

Finland NATO  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள பின்லாந்து விரைவில் நேட்டோ அமைப்பில் இணையவுள்ளது . நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கியின் நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது.

நேட்டோவில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு அதன் 30 அங்கத்துவ நாடுகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் கடந்த மே மாதம் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன
இந்நிலையில் அணிசேரா கொள்கையை கொள்கையைக் கடைபிடித்த இந்நாடுகள், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நேட்டோவில் இணைவதற்கு தீர்மானித்தன.

- Advertisement -

நேட்டோவின் 29 நாடுகள் சுவீடன், பின்லாந்தின் விண்ணப்பத்தை அங்கீகரித்திருந்த நிலையில், துருக்கியும் ஹங்கேரியும் தயக்கம்காட்டி வந்தன. பின்லாந்தின் இணைவுக்கு ஹங்கேரி கடந்த திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியது.

- Advertisement -

இந்நிலையில் துருக்கியின் நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. துருக்கியின் ஜனாதிபதி தையீப் அர்துகான் ஏற்கெனவே இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

இதன்படி, பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கான கடைசி தடங்கல் நீக்கியுள்ளது. அதேசமயம் ‘நேட்டோவின் 30 நாடுகளும் பின்லாந்தின் அங்கத்துவத்தை அங்கீகரித்துள்ளன.

அவர்களின் நம்பிக்கைகக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என பின்லாந்து பிரதமர் சவ்லி நீனிஸ்டோ தெரிவித்துள்ளார்.

 

Kidhours – Finland NATO

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.