Blinds Living Wonder Village பொது அறிவு செய்திகள்
இது ஒரு மர்மமான கிராமம், இங்கிருக்கும் ஒருவருக்கும் பார்வை இல்லை என்பதால், இது பார்வையற்றோர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விநோதத்தால் இந்த கிராமம் பிரபலமடைந்தது. கேட்பதற்கு மிகவும் விசித்திரமாக இருந்தாலும் இதன் பின்னணியில் உள்ள கதை அதிர்ச்சியளிக்கிறது.இந்த கிராமத்தின் பெயர் டில்டெபாக். இது மெக்சிகோவில் உள்ளது.
இங்கு வாழும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் என அனைத்தும் பார்வை திறனற்றவர்கள். அவர்களால் எதையும் பார்க்க முடியாது. இங்கு ஒரு குழந்தை பிறக்கும் போது, அதன் கண்கள் நன்றாக இருக்கும், ஆனால் படிப்படியாக பார்வையற்றவராக மாறும்.இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் பார்வை கோளாறு பிரச்னைக்கு சபிக்கப்பட்ட மரமே காரணம் என நம்புகின்றனர்.
லாவாசுவேலா என்ற மரம் இருப்பதாகச் சொல்கிறார்கள், அதைப் பார்த்து மனிதர்கள் முதல் விலங்குகள் மற்றும் பறவைகள் வரை அனைவரும் பார்வையற்றவர்களாக மாறுகிறார்கள். இந்த மரம் பல ஆண்டுகளாக கிராமத்தில் உள்ளது. இம்மரத்தைப் பார்த்தவுடன் பார்வையற்றவராகிவிடுவதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்த கிராமம் அமைந்துள்ள இடத்தில் விஷ ஈக்கள் காணப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஈக்கள் கடிப்பதால் ஒரு நபர் பார்வையற்றவராக மாறுகிறார். இது குறித்து தகவல் கிடைத்ததும் மெக்சிகோ அரசு கிராம மக்களுக்கு உதவ முயன்றது. ஆனால் அது வெற்றிபெறவில்லை.
அரசாங்கம் மக்களை மீள்குடியேற்ற முயற்சித்த போதிலும் அவர்களது உடல் ஏனைய காலநிலைக்கு ஏற்றவாறு மாறவில்லை. இதன் காரணமாக, மக்கள் நிர்ப்பந்தத்தின் பேரில் அவர்களாகவே வெளியேற வேண்டியிருந்தது.
Kidhours – Blinds Living Wonder Village, Blinds Living Wonder Village people
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.