Big Heart of Whale பொது அறிவு
கடலில் உயிர்வாழும் மிகப்பெரிய பாலூட்டி இனம், நீலத்திமிங்கலம். இது சுமார் 200 டன்கள் (சுமார் 33 யானைகள் எடைக்கு சமம்) வரை உடல் எடை கொண்டி ருக்கும். இதன் வெளித்தோற் றமே இவ்வளவு பெரியதாக காணப்படும்போது உடலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் இதயம் எவ்வளவு பெரியதாக இருக்கும்?
உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? சமீபத்தில் இணையதளத் தில் பகிரப்பட்ட நீலத்திமிங் கல இதயத்தின் புகைப்படம் பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
அந்த புகைப்படம் தற் போது இணையதளத் தில் வைரல் ஆகியுள் ளது. அதன்படி நீலத்திமிங்கலத்தின் இதயம் 181 கிலோ எடையும், 1.2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்டது.
இந்த நீலத்திமிங்க லம் இப்போது உயிருடன் இல்லை. அதன் இதயம் கனடாவில் உள்ள ‘ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு கனடாவில் உள்ள ராக்கி துறைமுகத்தின் கடற்கரையில் இந்த திமிங்கலத்தின் உடல் கரை ஒதுங்கியது.
உடல் முழுமையாக அழு காததால், இதயத்தை பாது காக்க கடல்சார் நிபுணர்கள் முடிவெடுத்தனர். அதன்படி உடலில் இருந்து இதயத்தை தனியாக பிரித்து எடுப்பதற் காகவே நான்கு தொழிலாளர் கள் பணி அமர்த்தப்பட்டனர்.
திமிங்கலத்தின் உடலில் ரத்தம் இல்லாத காரணத்தால் இதயம் சுருங்கி விடுவதை தடுப்பதற்காக ஆராய்ச்சி யாளர்கள் குழாய்களை பயன்படுத்தினர். இதயம் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு பார் டிஹைடை இதயத்தில் செலுத்தி தசைகளை னப்படுத்தினர்.
அதன்பிறகு இதில் உள்ள நீர் மூலக்கூறுகளை பிரிப்பதற் காக திமிங்கலத்தின் இதயம் விமானத்தின் மூலம் ஜெர் மனிக்கு அனுப்பிவைக்கப்பட் டது. அதை வல்லுநர்கள் அசிட்டோனில் ஊற வைத்தனர். அது ஒரு வருடம் உறைந்து, பிளாஸ்டிக் மயமாக் கப்பட்ட பின்னர் 2017-ம் ஆண்டு மக்களின் பார் வைக்கு வைக்கப்
பட்டது.
ஆய்வு அறிக்கையின்படி ஒரு உயிருள்ளா நீலத்திமிங்கலத் தின் இதயம் ஒரு நிமிடத்தில் 2 முதல் 10 முறை மட்டுமே துடிக் கிறது. அதேநேரத் தில் கடலின் மேற் பரப்பில் இருக்கும் போது, ஒரு நிமிடத்தில் 25 தொடக்கம் 37 தடவை துடிக்கிறது.
Kidhours – Big Heart of Whale
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.