Best wildlife photography பொது அறிவு செய்திகள்
பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் சிறந்த வனவிலங்கு புகைப்படமாக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வனவிலங்கு புகைப்படத்திற்கான விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலக அளவில் சுமார் 90 நாடுகளில் இருந்து மொத்தமாக 50,000 பேர் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற அனைவரும் தாங்கள் எடுத்த மிகச் சிறந்த வனவிலங்கு புகைப்படங்களை சமர்பித்தனர். அவற்றில் இருந்து சிறந்த 25 புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் சிறந்த படமாக தேர்தெடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை பிரிட்டன் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் நிமா சரிகானி எடுத்துள்ளார்.
“அடர்ந்த மூடுபனியில் துருவக் கரடிகளைத் தேடி 3 நாட்கள் செலவிட்டேன்.
A massive congratulations to Nima Sarikhani who has won our #WPYPeoplesChoice Award! 👏
‘Winning this award in this prestigious competition truly feels like a dream come true!’
Discover more about this year’s winning People’s Choice Award image: https://t.co/DMxNHKvB3U pic.twitter.com/XzxvTKuuhZ
— Wildlife Photographer of the Year (@NHM_WPY) February 7, 2024
அதன்படி பனி அதிகம் இருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு சிறிய மற்றும் பெரிய கரசிகளை பார்த்தேன். சுமார் 8 மணி நேரம் காத்திருந்தோம். அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த இள வயது கரடி சிறிய பனிப்பாறையின் மீது ஏறி, தனது வலுவான பாதங்களை பயன்படுத்தி ஒரு சமமான படுக்கையை உருவாக்கியது. அதனி படமாக எடுத்தேன்” என்று நிமா தெரிவித்துள்ளார்.
Kidhours – Best wildlife photography, Best wildlife photography award
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.