Earthquake Impacts சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்து குஷ் மலைத்தொடரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு.
சனிக்கிழமையன்று மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய நிலநடுக்கத்தால் இதுவரை 4,000 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் சுமார் 2,000 வீடுகள் முற்றாக இடிந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (ANDMA) தெரிவித்துள்ளது.இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக கிடைத்த புள்ளி விவரங்கள் 4,000 பேரைத் தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 கிராமங்களில், தோராயமாக 1,980 முதல் 2,000 வீடுகள் முற்றிலும் இடிந்துவிட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 35 மீட்புக் குழுக்களில் மொத்தம் 1,000க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் ஐக்கிய நாடுகள் சபையும் பல நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை செய்து வருகின்றன.
ஈரானிய தொழில்நுட்பக் குழு பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Earthquake Impacts
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.