Fire incident 10 Deaths சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (24-11-2022) இரவு ஜின்ஜியாங் மாகாணம் உரும்கியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தினால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கியது. தீ வேகமாக பரவியதால் அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 10 பேர் மூச்சு திணறியும், உடல் கருகியும் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கபட்பட்டனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
சீனாவில் சமீபகாலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய சீனா பகுதியில் ஒரு கம்பெனியில் வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சீனாவில் மீண்டும் கொரானோ பரவல் அதிகரித்து வருவதால் பல நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
தற்போது இதுபோன்று தொடர்ச்சியாக தீ விபத்து நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Kidhours – Fire incident 10 Deaths
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.