Tamil with Islam சிறுவர் கட்டுரை
உலகில் பல மொழிகள் காணப்பட்ட போதிலும் அவற்றினுள் தனித்தன்மையும், சிறப்பும் மிகுந்த ஓர் மொழியாகவே தமிழ் மொழி காணப்படுகின்றது. அதாவது காலத்தால் அழியாத சிறப்பு கொண்ட தமிழ் மொழியானது தமிழர்களின் வளர்ச்சியோடு இணைந்து கூடவே வளர்ந்து கொண்டு வருவதனைக் காணலாம்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் ஆதாரமாகவே 2004 ஆம் ஆண்டு செம்மொழி எனும் கௌரவம் அளிக்கப்பட்டது.
அதாவது தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுநிலைமை, தாய்மைத்தன்மை, தனித்து இயங்கும் தன்மை, கலைநயம், இலக்கிய இலக்கண வளம், உயர்ந்த சிந்தனை, மொழிக்கோட்பாடு, கலை பண்பாட்டுத்தன்மை ஆகிய அனைத்து பண்புகளையும் தமிழ் மொழி கொண்டுள்ளமையால் தான் செம்மொழி எனும் கௌரவம் கிடைத்துள்ளது.
தமிழ்மொழி தொன்மையான வரலாற்றையும் இலக்கியச்செழுமையையும் கொண்டது. உலகிலே உள்ள சிறந்த மதங்கள் அனைத்தும் தமிழ்மொழியையும்,தமிழ்இலக்கியத்தையும் வளம்பெற வைத்துள்ளன. தேனினும் இனிய தமிழ்மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர்களில், முஸ்லிம்கள் மதத்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும், தம் இனஅடையாத்தால் தமிழ்பேசும் இனமாகப் பண்டுதொட்டு திகழ்ந்திருக்கிறார்கள்.
மொழியைப் பேணுவதிலும், வளர்ப்பதிலும், தொண்டாற்றி வரும் முஸ்லிம்கள் சமய சார்பான செய்திகளை எடுத்துச் சொல்வதற்கு வளமான மொழியாகத் தமிழ்மொழியை உபயோகித்து வந்திருக்கிறார்கள்.
இன்றும் அத்தகைய முயற்சியில் வெற்றிகரமாக ஈடுபடுகிறார்கள். ஏழாம்நூற்றாண்டளவில் மார்க்கப் பிரசாரத்துக்காக அராபியர்கள் தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும் வந்தனர். அன்று தமிழ்பேசும் மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால், அராபியர்களும் தமிழ் கற்கவேண்டிய அவசியத்துக்குள்ளாகினர்.
இஸ்லாமியர்களின் மார்க்கநூலான குர்ஆன் அரபுமொழியில் இருந்ததால் அதனைக் கற்பிக்கும் நோக்கத்துக்காக புதிய ஒரு ஊடகம் அவசியமாயிருந்தது. இதன் விளைவாக தோற்றுவிக்கப்பட்டதே அரபுத்தமிழாகும்.
அரபு எழுத்தொலியன்களை தமிழில் அமைத்து எழுதுவதே அரபுத் தமிழாகும். தமிழ்பேசும் முஸ்லிம்கள் தங்கள் அரபுத் தமிழை ஒரு புனித மொழியாக மதித்தனர். இருப்பினும் சிலர் தமிழ்ப்புலவர்களிடம் தமிழ் மொழியை ஆர்வத்தோடு கற்றனர், புலமையும் பெற்றனர்; இந்தத் தமிழறிவு முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய கருத்துக்களை உள்ளடக்கிய பிரபந்தங்களை உருவாக்க உதவியது.
வண்ணப் பரிமளப் புலவரால் எழுதப்பட்ட “ஆரியமாலா” என்னும் 1055 விருத்தப் பாக்களைக் கொண்ட வினாவிடை நூல் முதலில் உருவானது. இதைத் தொடர்ந்து புராண இலக்கியப் படைப்புகள் தமிழில் ஆக்கம்பெற்றன . வித்துவசிரோன்மணி ஆலிப் புலவர் எழுதிய “மிஃறாஜ் மாலை” முஸ்லிம்களின் விண்ணுலக யாத்திரையைக் கருவாகக் கொண்ட நூலாகும்.
தமிழ்ப்புலவர்கள் இதற்கு முன்னர் தமிழில் யாத்தளித்துள்ள பல பிரபந்த வகைகளை பின்னர் வந்த முஸ்லிம்கள் முயன்று செய்துள்ளனர். இஸ்லாமிய கலை,கலாசாரம். வரலாறு போன்றவற்றை மக்களிடையே பதியவைக்க ஆயிரமாயிரம் தமிழிலக்கியங்கள் உருவாகத் தொடங்கின. இந்நூல்களில் அரபுப்பதங்கள் பரவிவருவது தவிர்க்க முடியாததாயிருந்தது.
இதற்குக் காரணம் அரபுச் சொற்களின் சரியான கருத்தை மக்கள் மனதில் பதியச்செய்யப் பொருத்தமான சொற்கள் தமிழிற் காணப்படாமையே ஆகும். இதன் விளைவாக பல அரபுச்சொற்கள் தமிழ்மக்கள் மத்தியிலும் திசைச் சொற்களாக வந்து சேரலாயின.
உரைநடைத் தமிழ்நூல்களோடு, மரபு வழுவாது யாப்புகளுக்கமைய எல்லாவகையான பாவினங்கள், பாவகைகளிலும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் கவிதைநூல்கள் இலக்கியங்களை பல துறைபோகக்கற்ற இலங்கையிலும் உருவாகினர்.
Kidhours – Tamil with Islam , Tamil with Islam stories
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.