Saturday, January 18, 2025
Homeகல்விகட்டுரை''அம்மா'' கட்டுரை - Amma Katturai

”அம்மா” கட்டுரை – Amma Katturai

- Advertisement -

Amma Katturai  ”அம்மா” கட்டுரை  சிறுவர் கட்டுரை

- Advertisement -

உயிர்களின் பிறப்பிற்கு அடித்தளம் அம்மா என்றால் அது மிகையாகாது. அன்பின் முழு வடிவம் அன்னையே ஆகும். இப் பூவுலகில் அன்னையின் அன்புக்கு இணையாக எதுவும் இல்லை. மனித உருவில் உள்ள தெய்வம் அம்மா.

“தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் அப்போதே தாய்மையின் சிறப்பினை போற்றி பாடியவர். தாய் என்பவள் இல்லை என்றால் இந்த உலகத்தில் மனிதன் என்ற பிறப்பே இருந்திருக்காது. அன்பினுடைய முழு வடிவமே தாய்மையை தான் குறிக்கும். சுயநலம் இல்லாத ஒரு உறவு என்றால் இந்த உலகில் தாய் மட்டும்தான்.

- Advertisement -

அம்மா என்ற ஒரு வார்த்தையில் முழு உலகமே அடங்கிவிடும். அம்மா என்ற தெய்வம்: இந்த உலகத்தில் அம்மாவைவிட வேறு எந்த சிறப்பும் இல்லை. நம்மை காப்பதற்கு பல கடவுள்கள் இருந்தாலும் தன் அன்னையை போல் காப்பதற்கு இந்த உலகத்தில் ஈடு இணை எதுவும் இல்லை. தான் அறிவில் குறைவாய் இருந்தாலும் தன்னுடைய குழந்தை அறிவிலும், படிப்பிலும் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று தன்னலம் பார்க்காமல் நினைப்பவள் அம்மா மட்டுமே

- Advertisement -

அம்மா என்ற ஒரு சொல்லில் இந்த உலகமே அடங்கிவிடும். தன்னலமில்லாத உன்னத உறவு அம்மா மட்டுமே. அன்பின் சிகரம் அம்மா பற்றிய கட்டுரையில் காண்போம்.
அம்மாவை விடச் சிறந்த தெய்வம் பூவுலகில் வேறு ஏதும் இல்லை. மனிதர்களுள் மேன்மையானவளாய் தெய்வங்களே வணங்கிடும் நடமாடும் அழகு தேவதையாய் அன்பின் திருவுருவமாக விளங்குபவள் அம்மா.

பல காவற் தெய்வங்கள் இருப்பினும் அன்னை போல் நம்மை காக்கும் தெய்வம் பூமியில் ஏதும் இல்லை. தாயே தெய்வமாய் இருப்பதனால் தான் “தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லைˮ எனக் கூறுகின்றனர். உடலுக்கு உயிர் கொடுத்து தன் இரத்தத்தைப் பாலாக்கி உலகை அறிய வைத்த நடமாடும் தெய்வம் அன்னை.

 

திருக்குறள் கூறும் அம்மா

கவிதை அம்மா

தான் படிக்காதவளாய்⸴ அறிவிலியாய் இருந்தாலும் தன் பிள்ளைகளைச் சிறப்பாக வாழ வைக்க வேண்டுமெனத் தன் தூக்கத்தை இழந்து நமக்காய் பாடுபடும் தியாக தீபம் அம்மா. தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் உன்னத உறவாக இருப்பதும் அம்மா என்னும் உறவு மட்டுமேயாகும்.

தாய் என்பவள் மனிதருக்கு மட்டுமன்றி சகல ஜீவராசிகளுக்கும் முக்கியமானவள். தாய்ப் பாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. தாய்ப் பாசத்திற்கு ஏதும் ஈடாகாது. கொடூரமான மனம் படைத்த பிள்ளைகளைக் கூட தாய்ப்பாசம் பணிய வைத்து விடும்.

Amma Katturai  ''அம்மா'' கட்டுரை  சிறுவர் கட்டுரை
Amma Katturai  ”அம்மா” கட்டுரை  சிறுவர் கட்டுரை

ஐந்தறிவு படைத்த ஜீவராசிகள் கூட தன் குட்டிகளை அல்லது குஞ்சுகளைப் பாதுகாத்து அதற்கு உணவளித்து பராமரிக்கிறது என்றால் அது தாய்ப் பாசத்தாலேயாகும். தாய்ப்பாசம் இல்லையெனில் இப்பூவுலகம் முழுமை பெறாது.
தன்னுடைய உயிராலும்⸴ மெய்யாலும் நமக்கு உயிர்மெய் தந்த தாயை என்றும் போற்றித் தொழ வேண்டும். தாய்மையைப் போற்றுவதற்கு அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஆனால் அன்னையர் தினத்தில் மட்டுமல்லாது நாம் வாழ்நாள் முழுவதிலும் தாயைப் போற்றவேண்டும்.

அவள் எண்ணங்கள்⸴ விருப்பங்களை நிறைவேற்றி நல்ல குழந்தையாக சமூகத்தில் வாழ வேண்டும். முதுமைக் காலங்களில் அவளைப் பேணிக் காக்க வேண்டும்.
நம்மை எவ்வாறு கண்ணின் மணி போல் அன்னை காத்தாளோ அதே போல் நாமும் முதுமைக் காலங்களில் கூடுதல் கவனம் எடுத்து அன்னையைக் காக்க வேண்டும். பசிக்க விடாது உணவளித்து நோயுற்ற காலங்களில் மருத்துவம் செய்து அவள் மனம் புண்படாத வகையில் காக்க வேண்டும்.

 

Kidhours – Amma Katturai, Mother’s Day Special in tamil ,Mother essay in tamil

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.