Thursday, November 21, 2024
Homeகல்விகட்டுரை''இணையதளம்'' கட்டுரை Essay About Internet

”இணையதளம்” கட்டுரை Essay About Internet

- Advertisement -

Essay About Internet in Tamil  சிறுவர் கட்டுரை

- Advertisement -

”இணையதளம்” கட்டுரை

இணையம் என்றால் என்ன என்று அறிமுகம் தேவையில்லாத அளவுக்கு, இன்று இண்டர்நெட் எங்கும் பரவியுள்ளது. இணையத் தொடர்பு இல்லா வீடும் இல்லை; அலுவலகங்களும் இல்லை. ஏன், கிராமங்களில் மாடுகள் வைத்து பால் விற்கும் படிப்பறியாப் பெண்கள்கூட, தங்கள் வியாபாரத்திற்காக இணையத்தைப் பயன்படுத்துமளவு இணையத்தின் பயன்பாடுகள் எண்ணற்றவை.

- Advertisement -

தமிழகத்தின் சென்ற ஆட்சிகளில், இலவசமாக செருப்புகள் தந்தார்கள்; சைக்கிள்கள் தந்தார்கள்; டிவிக்கள் தந்தார்கள். ஆனால், இன்றைய தமிழக அரசு, ”விலையில்லா” மடிக்கணினியை வழங்கிவருவது ஏன்? இன்டர்நெட்டின் பயன்களை அறிந்தமையால்தானே, அதை முறையாகப் பயன்படுத்த லேப்-டாப் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்று கொடுக்கிறார்கள்!!

- Advertisement -

தற்சமயம் இணையத்தை பயன்படுத்தாதவர்களை கணக்கிடுவது மிக எளிது,கோடிக்கணக்கான மக்கள் தற்சமயம் இணையத்தின் மூலம் புவியை சின்னஞ்சிறிய கிராமம் என சொல்லும் விதத்தில் பயன்பெற்று வருகின்றனர்.இணையம் மிகசிறந்த பயன்களை தரும் வேலையில் அதன்மூலம் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது .முறைப்படுத்த பட்ட இணைய வழி தொடர்புகள் மற்றும் பயன்பாடுகளின்படி மனித கலாச்சாரம் மென்மேலும் தொடர்ந்து இந்த அறிவியல் உலகில் பயணிக்கிறது.

இணையத்தின் பயன் என்ன என்ற கேள்விக்கு இணையத்தை பயன்படுத்தி சாதிக்க முடிந்த அனைத்து சாத்தியங்களையும் கூறலாம்,இணையத்தை பயன்படுத்த தொடங்கியது முதலாக பயனற்று போன அனைத்து நற்செயல்கள் அனைத்தையும் இணைய தீமைகள் என்ற பட்டியலில் பெரும்பாலும் இணைக்க முடிகிறது.

அமர்ந்திருக்கும் இடத்தில இருந்து உலகில் உள்ள அனைத்து மூலைகளிலும் உள்ள தகவல்களை பெற முடிந்த அதே நேரத்தில்,வீட்டின் அருகில் இருக்கும் நன்மையான விஷயங்களை நம் பார்வைக்கு உணராமல் போகின்ற அபாயம் இருக்கத்தான் செய்கிறது.தொடர்ந்து இணையத்தை பயன்படுத்த புதிய புதிய சாதனங்கள் உலகளவில் கண்டுபிடிக்க பட்டு வரும் அதே நேரத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் இணைய பயன்பாடும் தொடந்து அதிகரித்து வருகிறது,உதாரணமாக குழந்தைகள் செல்லிடை பேசியில் தொடர்ந்து இணையத்தை பயன்படுத்த தொடங்கியதை கூறலாம் .

மிக அருகில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்ப்பது எவ்வளவு தீமையானது என்று ஒரு காலத்தில் பாடம் நடத்தி வந்த நாம் தற்சமயம் பாடங்களை செல்லிடை பேசி மூலம் அவர்களது கண்களுக்கு அருகில் கொண்டு சென்று விட்டோம்.

நன்மைகள்

உலகில் நடக்கும் அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது
நண்பர்களுடனும் உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருக்க முடிகிறது.

வங்கி மற்றும் அலுவல் பணிகளை இணையத்தின் மூலம் சுலபமாக வீட்டில் இருந்தே செய்து முடிக்க முடிகிறது.
கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தடையிண்டு பயில இணையம் மாணவர்களுக்கு உதவியது.
மிக குறைந்த அளவே உள்ள புத்தகங்களை நகல் பரிமாண வடிவில் குறைந்த செலவு அல்லது இலவசமாக படிக்க முடிகிறது.
தனியாக திறைமைகளை வளர்த்துக்கொள்ள விரும்புபவருக்கு காணொளி மூலமாக புதிய உத்திகளை கொண்டுசேர்க்க முடிகிறது.
மருத்துவம் சார்ந்த சந்தேகங்களை இணையம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது
தற்சமயம் இணையத்தின் மூலம் பொருட்களை வாங்குவது எளிதாக மாறிவிட்டது

Essay About Internet in Tamil  சிறுவர் கட்டுரை
Essay About Internet in Tamil  சிறுவர் கட்டுரை

 தீமைகள்

இணையம் மூலம் நடக்கும் வங்கி பரிவர்த்தனைகள் சுலபமாக திருடுபோகும் சூழலும் உண்டு
பாடம் மட்டும் பயில நினைக்கும் மாணவர்க்கு சுலபமாக திசைதிருப்பும் துருப்புகள் இணையத்தில் அதிகம்
தொடர்ந்து ஒரே இடத்தில அமர்ந்து உடல்நிலையை கெடுத்து கொள்பவர்கள் ஏராளம்
கண்பார்வை குறைபாடுகளுக்கு தொடர்ந்து இணையத்தை பயன்படுத்துதல் காரணமாக அமைகிறது.
மருத்துவர் துணையின்றி மருந்துகளை பயன்படுத்த தொடங்குவது இணையத்தின் மூலம் சாத்தியம் என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
சமூக வலைத்தளங்களில் முறையற்ற தகவல்களையும் , வெறுப்பு உணர்வுகளையும் பகிர கட்டுப்பாடுகள் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை என்பது மிகபெரிய அபாயமாகும்

 

Kidhours – essay About Internet , ”இணையதளம்” கட்டுரை

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.