Monday, January 20, 2025
Homeகல்விகடல் வளங்களின் முக்கியத்துவம் #kidhours Tamil kids education

கடல் வளங்களின் முக்கியத்துவம் #kidhours Tamil kids education

- Advertisement -

tamil kids education   கல்வி சிறுவர் கட்டுரை

- Advertisement -

கடலில் உள்ள வளங்கள் மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பயனுள்ளதாக உள்ளன. கடலில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவிலிருந்து புவியின் பெரும் பிராணியான திமிங்கலம் வரை உள்ளன. 150,000 வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அதில் 16,000 வகைமீன்களும்,20,000 வகை தாவரங்களும் அங்கு உள்ளன.கடலில் உப்பு முதல் அனைத்து வகையான எல்லாக் கணிப்பொருட்களும் உள்ளன. உப்பு, மக்னீசியம், புரோமின், கந்தகம், பாஸ்பேட், மாங்கனீசு உருண்டைகள், தங்கம், நிலக்கரி தவிர இரும்பு, தகரம், பொட்டாசியம், யுரேனியம் மற்றும் குரோமைட் இருப்பதாககண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் தெழிற்சாலை வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன.

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சக்திவளங்களான எண்ணெய் கடலுக்கு அடியில் கண்டங்களின் கண்டத்திட்டுப் பகுதியில் இருப்பதாக கண்டுள்ளனர். எனவே நமக்குத் தேவையான சக்தி வளங்களையும் கடல் அளிக்கிறது. ஒதங்களின் மூலம் ஒத சக்தியும் பெறப்படுகின்றது.

- Advertisement -

கடலிலிருந்து உணவுப் பொருட்கள் தேவையான அளவு பெறப்படுகின்றது. மீன் ஒரு முக்கிய உணவுப் பொருளாகவும், மீன் எண்ணெய், மருந்து மற்றும் உரங்கள் தயாரிக்க மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றது. மீன் பிடிக்கும் தொழில் ஒரு முக்கியத் தொழிலாக வெப்ப மண்டலங்களில் பின்பற்றப்படுகிறது. உலகின் முக்கிய மீன் பிடித் தளங்கள் அனைத்தும் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளன.

tamil kids education kidours
tamil kids education kidours

ஆழ்கடல்களும் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு உரிய தளங்களாக உள்ளன. இதிலிருந்து சீல், திமிங்கலம் போன்ற மதிப்புமிக்க மீன்கள் பிடிக்கப்பட்டு எண்ணெய், தோல் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
கடல் மழையைத் தரக்கூடிய ஒரு முக்கிய ஆதாரம் எனலாம். கடலிலிருந்து வீசும் காற்றுகளின் மூலம் கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதிகள் அதிக மழை பெறுகின்றன. மேற்கண்டவாறு கடலின் எண்ணற்ற வளங்கள் நம் வாழ்க்கைக்கு உறுதுணை புரிகின்றன. எனவே கடலை மாசுபடுத்தாமல் காப்பாற்றுவது நமது கடமையாகும்.

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

kidhours

,

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.