Earthquake Afghanistan \சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் இன்று (11.10.2023) காலை மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஹெராத் நகருக்கு அருகே கடந்த (07.10.2023) ஆம் திகதி தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 2500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலநடுக்கங்களின் போதும், 6.3 ரிக்டர் அளவில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.பல கிராமங்கள் தரைமட்டமாகி, 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், அதே ஹெராத் நகருக்கு 28 கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது.
இதுவும் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. கடந்த நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.