Drought in Amazon சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென் அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நதியான அமேசன் நதி வரலாறு காணாத அளவில் வறட்சியடைந்துள்ளதால் 100க்கும் அதிகமான டொல்பின்கள் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமேசன் நதியில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக அதன் கிளை நதிகளிலும் நீர் குறைவடைந்துள்ளது.
பிரேசிலில் மனாசில் 17.60 மீட்டராக இருந்த நீர் மட்டத்தின் அளவு தற்போது 13.59 அளவில் குறைந்துள்ள நிலையில் பிரேசில் 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உலகளாவிய வெப்பநிலை உயர்வாலும் பருவநிலை மாற்ற பிரச்சினைகளாலும் இந்த வறட்சி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பிரேசிலில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாகவே டொல்பின்கள் இறந்து உள்ளன.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிவரும் நிலையில் கிளை ஆறுகள் வற்றி உள்ளதால் உதவி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் மட்டுமன்றி மாசடைந்த நீரை பருகுவதால் சுகாதார ரீதியிலான பிரச்சினைகளும் ஏற்பட தொடங்கியுள்ளது.
உலக வெப்பமயமாதலை தடுக்காவிட்டால் இந்த பாதிப்புகளை உலகம் எதிர்நோக்க தயாராக வேண்டுமென அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
Kidhours – Drought in Amazon , Drought in Amazon update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.