Dolphins Died சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரேசிலில், மழைக்காடுகளின் வழியாக ஓடும் அமேசான் நதியின் கிளை நதிகள் வறண்டுள்ளதால், டால்பின்கள் இறந்துவிட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வறட்சி காரணமாக, அமேசானின் கிளை நதிகள் வறண்டுள்ளன.இதனால், அந்த நதிகளின் வழியாக தொலை தூர கிராமங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான டால்பின்களும் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், ஏராளமான படகுகள் தரைத்தட்டி கிடக்கின்றன. இதுதொடர்பான ட்ரோன் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
Kidhours – Dolphins Died
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.