Discovery About Squirrels சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அனைவருக்கும் பிடித்த ஒரு செல்லப்பிராணியாக காணப்படும் அணிகள் அதன் மென்மையான தன்மை , அழகு , துடிப்பான அசைவுகள் மற்றும் ஒரு சாதுவான மிருகம் என்பதனால் ஆகும் அத்துடன் அணில்கள் என்றால் பழங்கள், கொட்டை கள் ஆகியவற்றை உண்ணும் சைவப் பிராணி என்று தான் நினைத்திருப்போம். ஆனால், அவை அனைத்துண்ணிகள்.
அவை சில நேரங்களில் சிறிய பூச்சிகள், பறவைகளின் முட்டைகள், பல்லிகள் ஆகியவற்றையும் உட்கொள்கின்றன. ஆனால், முதன்முறையாக அணில்கள் வேட்டையாடி ஓர் உயிரைக் கொன்று உண்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கின்றனர். இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு என்று கூறுகிறார்கள்
.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு விஞ்ஞானிகள் குழு 12 ஆண்டுகளாக அணில்களைத் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறது. இதுவரை கலிபோர்னியாவில் வாழும் அணில்கள் இறந்த அல்லது வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தையோ உட் கொண்டு பார்த்தது இல்லை.
ஆனால், கடந்த ஆண்டு 2024 ஜூன், ஜூலை மாதங்களில் கலிபோர்னியாவின் பல்வேறு இடங்களில் அணில்கள் கண்காணிக்கப்பட் டன. அப்போது அவை கலிபோர்னியா வோல் (California vole) எனப்படும் எலி போன்ற ஒரு சிறிய கொரித்துண்ணியை வேட்டையாடுவது தெரிய வந்தது.
மனநலம் குன்றிய சில அணில்கள் தான் இவ்வாறு வேட்டையாடி உண்ணுகின்றன என்று முதலில் நினைத்திருந்தனர்.
ஆனால், ஆண், பெண். குட்டி அணில், பெரிய அணில் என அனைத்துமே இப்படியாக வேட் டையாடியது தெரிய வந்துள்ளது.
தங்களை விட உருவில் சிறிய இந்த சுவர்களிலும் வோல் எனப்படும் எலி மீது மிக வேகமாகப் பாய்ந்து, அவற்றின் கழுத்தைக் கடித்துக் கொல்கின்றன. இது வீடியோவாகவும் பதிவாகி இருக்கிறது.
அணில்கள் மனிதர்களோடு நீண்ட காலமாக வாழ்பவை. அவற்றைப் பற்றி நாம் நன்றாக அறிவோம். அது வேட்டையாடி உண்ணும் வழக்கத்தைக் கொண்டது இல்லை. முதன்முறையாக இப் போதுதான் அணில்களிடையே வேட்டையாடும் விசித் திர வழக்கம் கண்டறியப் பட்டுள்ளது.
பருவ கால மாற்றங்கள். காடுகள் அழிக்கப்படுதல் போதுமான உணவு கிடைப் பதில் சிக்கல் இப்படியான காரணங்களால் தான் அணில்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொள்கின்றன என்று விஞ்ஞானி கள் கூறுகின்றனர்.
Kidhours – Discovery About Squirrels
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.