Treeless Mountains In Tami தேடல்
மரங்கள் இருக்கும் மலைப் பகுதி களைத்தான் நாம் பார்த்திருப்போம் மரங்களே இல்லாமல் புல்வெளி மட்டும் பரவியிருக்கும் மலையைப் பார்த்திருக்கி றீர்களா? மேற்குத் தொடர்ச்சி மலைத் தொ டரில் மரங்கள் நிறைந்த மலைப் பகுதிகள் அதிகளவில் உள்ளன.ஆனாலும் புல்வெளி மட்டுமே பரவியிருக்கும் மலையும் இருக் கிறது. தமிழகத்தின் வால்பாறையில்தான் புல்வெளியால் சூழ்ந்த மலை உள்ளது.
இது ஆனைமலை புலிகள் காப்பகப் பகு தியில் இருக்கிறது. புல்மலை (Grass hills கிராஸ் ஹில்ஸ்) என அழைக்கப்படும் இம்மலை கேரளாவிலும் தமிழகத்திலும் பரவி இருக்கிறது. இது ஆங்கிலத்தில் ‘சோலா கிராஸ் லாண்ட்'(shola grassland) என்று வழங்கப்படுகிறது. சோலை என்ற தமிழ்ச் சொல்தான் அவ்வாறு ஆங்கிலத் தில் மருவியுள்ளது.
சிறுத்தை, கருங்குரங்கு, சிங்கவால் குரங்கு, காட்டு அணில், அரியவகை பறவை வகைகள் என பலவகை உயிரினங் களை இங்கு காண முடியும்.
இங்கு பல அரியவகையான புல்வெ ளிகள் இருக்கின்றன.
அவை மழைக் காலத்தில் தண்ணீரை உறிஞ்சி, சேமித்து, கோடை வெப்பத்தைச் சமாளிக்கும் தன் மையைப் பெற்றிருக்கின்றன. இவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு உலகெங்கிலும் இருந்து தாவரவியலாளர்கள் வருகிறார் கள். இந்த மலைப் பகுதியைப் பார்க்க வனத்துறையின் அனுமதி தேவை.
Kidhours – Treeless Mountains In Tamil, Treeless Mountains In Tamil # Shola Grassland in Tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.