Nepal Earthquake உலக காலநிலை செய்திகள்
நேபாள நாட்டின் பாஜுரா மாவட்டத்தில் இன்றைய தினம் (22-02-2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவித்தட்டுகள் நகர்வதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதே போல் டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளிலும் இன்று லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Nepal Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.