Tamil kids news
சீனாவின் செயற்கை சூரிய அணு உலை பிறப்பாக்கியானது 216 மில்லியன் பரனைட் வெப்ப நிலையில் அதாவது 100 மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இயங்கியதினூடாக புதியதொரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளதாக அந்நாட்டு செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் 288 மில்லியம் பரனைட் அதாவது 160 மில்லியன் என்ற அதி உச்ச வெப்பநிலையினையும் அது அடைந்துள்ளது. உயர் மற்றும் சிறப்புத்தன்மை வாய்ந்த பரிசோதனை டொகாமர்க் ஆனது எல்லையற்ற தூய்மையான சக்தி என்ற கோட்பாட்டில் பீஜிங் இல் சக்திவாய்ந்த பசுமை சக்தி முதல் ஒன்றுக்கான வழியை திறந்துவிடும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
செயற்கை சூரியன்…புதிய முயற்சியில் இறங்கிய சீனா..!
கிளவுட் சீடிங் (Cloud seeding) எனப்படும் மேக விதைத்தல் மூலமாகத்தான் செயற்கை மழையை உருவாக்குதல், செயற்கை நிலவை உருவாக்குதல் வரிசையில் தற்போது செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீனா களமிறங்கியுள்ளது.
புதுமையையும், வித்தியாசத்தையும் கொடுக்கும் மந்திரக்காரர்கள் சீனர்கள். அந்தவகையில் தற்போது சீனர்கள் கையில் சிக்கியிருப்பது சூரியன். சீனாவை சேர்ந்த National Nuclear Corporation இயற்பியல் ஆய்வகத்தில் பணியாற்றி வரும் அறிவியலாளர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகளில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து, அதன்மூலம் மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்யும் நிகழ்வு அணுக்கரு இணைவு என அழைக்கப்படுகிறது.
இப்படி ஒரு செயல் நிகழ்வதால்தான் சூரியனில் ஒளியும், வெப்பமும் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது. அணுக்கரு இணைவை செயற்கையாக பூமியில் உருவாக்குவதுதான் செயற்கை சூரியன். இதற்காக Experimental Advanced Superconducting Tokamak Reactor என்ற பெயரில் அணுக்கரு உலையை உருவாக்கிய சீனர்கள், இதன்மூலம் அணுக்கரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அணுக்கரு இணைப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ, அவ்வளவு நேரம் சூரியன் ஒளிரும்.
சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ். ஆனால் சீனா தயாரித்து வரும் இந்த செயற்கை சூரியனின் வெப்பநிலை 100 மில்லியன் டிகிரி செல்ஷியஸ் ஆகும். இயற்கையான சூரியனை விட இதன் வெப்பம் 6 மடங்கு அதிகமானது. HL-2M Tokomak என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை சூரியன் 2020 அல்லது 2021 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஒளிரும் என கூறுகின்றனர் சீனர்கள்.