China and US Epidemic சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனா மற்றும் அமெரிக்கா உட்பட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், சீனாவில் 60% மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2019 வூஹான் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு போன்று தற்போது சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. ஒமைக்ரான் பி.எஃப்.7 என்ற வகை வைரஸ் தற்போது கட்டுக்கடங்காமல் பரவுகிறது.
![சீனா, அமெரிக்கா நாடுகளில் வேகமெடுக்கும் தொற்றுநோய் China and US Epidemic 1 China and US Epidemic சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/12/Untitled-design-72.jpg)
மட்டுமின்றி, கொரோனா பாதிப்பால் பலர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து வருகின்றனர். தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் மருத்துவமனைகளில் அதிகம் காணமுடிகிறது.
இதேநிலை நீடித்தால், சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது மிகவும் ஆபத்தான விடயம் என நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, சீனாவில் நவம்பர் 19 முதல் 23-ம் திகதி வரை 4 பேர் மட்டுமே கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக பெய்ஜிங் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், உண்மையில் அங்கு இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பெய்ஜிங் நகரில் கொரோனாவால் மரணமடைந்தோர் குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன என அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Kidhours – China and US Epidemic
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.