Sunday, October 6, 2024
Homeகல்விகட்டுரைபூனைகள் பற்றிய சிறுவர் கட்டுரை Cat Short Essay

பூனைகள் பற்றிய சிறுவர் கட்டுரை Cat Short Essay

- Advertisement -

Cat Short Essay சிறுவர் கட்டுரை

- Advertisement -

நாய்களுக்கு அடுத்த படியாக பூனைகள் அதிகம் காணப்படுகின்றன. சில மர்மமான ஆளுமைகள் மற்றும் நல்ல அழகான தோற்றம் பூனைகளை செல்ல பிராணிகள் பட்டியலில் வைத்து உள்ளது. பூனைகளை ஒரு சிலரே ஆசையாக வீட்டில் வாளர்ப்பார்கள். பலர் அவற்றின் சில குணநலன்களை காரணம் காட்டி வளர்ப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.குறிப்பாக பூனைகளை விரும்பாதோர் அல்லது வளர்க்க விரும்பாதோர், பூனைகள் கணக்கிடக்கூடியவை மற்றும் மிகவும் சுயநலம் கொண்டவை என்று பல காரணங்களை கூறுவார்கள்.

ஆனால் எகிப்திய கலாச்சாரத்தில் பூனைகள் நன்கு மதிக்கப்படுகின்றன. பூனைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்படாத பல சுவாரஸ்ய மற்றும் வேடிக்கையான உண்மைகள் உள்ளன.எகிப்தியர்கள் தான் முதலில் பூனையை வளர்த்தவர்கள் என்று கருதப்பட்டது. ஆனால் 2004 இல், பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சைப்ரஸில் 9,500 ஆண்டுகள் பழமையான பூனை கல்லறையைக் கண்டுபிடித்தனர். இதன் மூலம் பூனை மிகவும் பழமையான செல்ல பிராணி என்பது தெரிய வருகிறது.

- Advertisement -

தங்கள் வாழ்நாளில் 70% தூக்கத்தில் செலவிடும் பூனைகள்..
பூனைகள் உண்மையில் தங்கள் வாழ்க்கையில் 70% தூக்கத்தில் செலவிடுகின்றன. ஒரு நாள் என்று பார்த்தால்13 முதல் 16 மணிநேரம் வரை இவை தூங்குகின்றன.

- Advertisement -

உலகின் பணக்கார பூனைக்கு சுமார் 7 மில்லியன் பவுண்டுகள் சொத்து இருந்தது. கின்னஸ் உலக சாதனையின் படி அந்த கோடீஸ்வர பூனையின் பெயர் பிளாக்கி. இதன் உரிமையாளர் இறப்பதற்கு முன் இந்த பூனையின் பெயரில் சொத்துக்களை எழுதி வைத்ததால் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்தது.

விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட குரங்குகள் மற்றும் நாய்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு பூனை கூட விண்வெளிக்கு செல்லுமளவிற்குதைரியமாக இருந்தது உங்களுக்குத் தெரியுமா..? 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி ‘ஆஸ்ட்ரோகேட்’ என்றும் அழைக்கப்படும் ஃபெலிசெட் தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மற்றும் ஒரே பூனை.சிறிய நகரத்தின் மேயராக 20 ஆண்டுகள் இருந்த பூனை..

Cat Short Essay சிறுவர் கட்டுரை
Cat Short Essay சிறுவர் கட்டுரை

என்னது, பூனை மேயராக இருந்ததா என்று நீங்கள் வியப்பது சரி தான். ஸ்டப்ஸ் என்று அழைக்கப்பட்ட ஆரஞ்சு கலர் டேபி பூனை, அலாஸ்காவில் உள்ள டால்கீட்னா என்ற சிறிய நகரத்தின் மேயராக 20 ஆண்டுகள் இருந்தது. உள்ளூர் மக்களாலும் சுற்றுலாப் பயணிகளாலும் அதிகம் விரும்பப்பட்டதால் அந்த பூனை போட்டியின்றி பல தேர்தல்களை சந்தித்தது. மேயர் பூனை அல்லவா.! அதனால் அது சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை.

ஒரு வீட்டுப் பூனை மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓடக்கூடியது மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உசைன் போல்ட்டை கூட வெல்லும் தன்மை கொண்டது. இதுவரை வாழ்ந்ததிலேயே மிக அதிக வயது வாழந்த பூனையின் பெயர் க்ரீம் பஃப் (Creme Puff). இது 38 ஆண்டுகள் மற்றும் 3 நாட்கள் வாழ்ந்தது. ஆகஸ்ட் 3, 1967 இல் பிறந்த இந்த பூனை ஆகஸ்ட் 6 வரை உயிர் வாழ்ந்தது.

 

Kidhours – About Cat , Cat Short Essay , Cat Short Essay update

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.