Cassava Tuber Recipe பொழுதுபோக்கு
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ (துருவியது)
பச்சரிசி – 250 கிராம்
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு
உளுத்தம்பருப்பு-200 கிராம்
மரவள்ளிக்கிழங்கு கார அடை
காய்ந்த மிளகாய் – 6 இஞ்சி – ஒரு இன்ச் துண்டு (தோல் சீவியது)
வெங்காயம் – ஒன்று
பூண்டு – 6 பல்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கப்
எண்ணெய் – 500 மில்லி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பின்பு கழுவி வடித்து வைக்கவும். பின்பு அதில் இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்- காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி அத்துடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தோசை தவாவில் எண்ணெய்- விட்டு கொஞ்சம் கனமான அடைகளாக வார்த்து பொன்னிறமாகத் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி ஏற்றது.
Kidhours – Cassava Tuber Recipe
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.