Broken Phone Essay சிறுவர் கட்டுரை
“உடைந்த தொலைபேசியின் சுயசரிதை கட்டுரை”
அன்றாடம் எமது தொடர்பாடல்களை மேற்கொள்ள பெரும் உறுதுணையாக இருப்பது இந்த தொலைபேசிகள். இன்று தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் பல வடிவங்களில் எமக்கு கிடைக்கின்றன.
இன்று உடைந்த நிலையில் இருக்கின்ற ஒரு தொலைபேசி தான் நானாவேன். வெகுதொலைவில் இருந்த பல உறவுகளை குரல் வழியாக இணைத்து அந்த உறவுகளுக்கு பாலமாக இருந்தவன் நான்.
என்னுடைய கடந்த காலத்தை என் மனதுக்குள் மீட்டி பார்த்து கொள்கின்றேன். நான் கடந்த பத்து வருடங்களாக எனது சேவையினை அந்த குடும்பத்தவர்களுக்கு வழங்கி வந்தேன். என்னை ஒரு தொலைபேசி என்பதனை தாண்டி அந்த குடும்பத்தில் ஒரு அங்கத்தவர் போலவே அவர்கள் பாவித்தனர்.
அவர்களை தேடி வருகின்ற மகிழ்ச்சியான செய்திகளானாலும் அவசர அழைப்புக்களானாலும் அவர்களுக்கு முதலில் தெரியப்படுத்துவது நான் தான். வெளியூரில் இருக்கின்ற தமது உறவுகளோடு நீண்ட நேரம் அவர்கள் உரையாடி கொள்ளும் போது அவர்கள் தமது அருகில் இருப்பது போன்ற உணர்வை நான் அவர்களுக்கு கொடுப்பேன்.
வெளியூர்களில் இருந்து தங்கள் வருகையினை விருந்தினர்கள் அறிவிக்கும் போதெல்லாம் அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. இவ்வாறு அவர்களது தொடர்பாடலில் ஒரு கருவியாக நான் பங்களித்து கொண்டிருந்தேன்.
அழைப்பு ஏற்படும் போது சத்தமாக நான் மணி எழுப்புகையில் எங்கிருந்தாயினும் யாரேனும் ஒருவர் ஓடி வந்து அழைப்பை எடுத்து பேசுவார்கள். அந்த குடும்பத்தின் சிறுவர்கள் தமது நண்பர்களுக்கு அழைத்து அரட்டையடித்து கொண்டிருப்பார்கள்.

நண்பர்களுக்கிடையான எத்தனையோ அன்பையும் நட்பையும் நான் பரிமாறி கொண்டிருப்பேன். இவ்வாறு எனது இறுதி காலம் வரையில் எனது சேவையினை நான் வழங்கினேன்.
அன்றொரு நாள் தவறுதலாக கீழே விழுந்து நான் உடைந்து போக இன்று இந்த நிலையில் கைவிடப்பட்டபவனாக தொடர்பற்று கிடக்கின்றேன்.
Kidhours – Broken Phone Essay , Broken Phone Essay update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.