Boat Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென்னாபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தின் போது படகில் சுமார் 130 பேர் வரையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் படகு விபத்தில் நீரில் மூழ்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கொலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகு விபத்தின் போது காணாமல்போன ஏனையவர்களை தேடும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
இதேவேளை குறித்த படகில் அதிகபட்சம் 100 பேர் பயணிக்க முடியுமெனவும் அதில் சுமார் 130 பேர் பயணித்ததாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Boat Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.