Artificial blood for humans பொது அறிவு செய்திகள்
ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை இரத்தம் உலகில் முதல் தடவையாக மனிதர்கள் இருவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கரண்டிகள் அளவிலான சொற்ப அளவில், ஆய்வுடத்தில் உருவாக்கப்பட்ட இரத்தம் சோதனைக்காக இவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
குருதி மாற்றீடுகளுக்கு மனிதர்களின் நன்கொடைகளிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.
![மனிதர்களுக்கு செயற்கை இரத்தம் Artificial Blood for Humans 1 Artificial blood for humans பொது அறிவு செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/11/உலகில்-முதல்-தடவையாகசெயற்கை-இரத்தம்-1.jpg)
இந்த நிலையில், முக்கியமான ஆனால், பெறுவதற்கு கடினமான அரிய வகையான வகைகளைச் சேரந்;த குருதிகளை ஆய்வுகூடத்தில் உருவாக்குவதை இந்த ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் பிரிஸ்டல், கேம்பிரிட்ஜ், லண்டன் நகரங்களைச் சேர்ந்த ஆய்வுக்குழுக்களும் பிரத்தானிய தேசிய சுகாதார சேவையின் குருதி மற்றம் உறுப்பு மாற்றீட்டு பிரிவும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.
ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட இரத்தத்தை ஆரோக்கியமான 10 தொண்டர்களுக்கு செலுத்தி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அவர்களில் இருவருக்கு இந்த இரத்தம் செலுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Artificial blood for humans
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.