Friday, September 20, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புகாத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி Another World Crisis

காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி Another World Crisis

- Advertisement -

Another World Crisis  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் முடிவிற்கு வராத நிலையில் மேலும் இரு நாடுகள் போருக்கு தயாராகிவருகிறது.

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகள் அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், ஏஜியன் அல்லது கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் ஏற்படக்கூடிய இராணுவ நடவடிக்கைகள் போரில் முடிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

2023 ஜூன் மாதம் துருக்கியிலும் கிரேக்கத்திலும் தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி துருக்கி ஜனாதிபதி படையெடுப்பை முன்னெடுக்கக் கூடும் என கிரீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது.

- Advertisement -
Another World Crisis  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Another World Crisis  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

கடந்த ஆகஸ்டு மாதம் துருக்கி ஜனாதிபதி எர்டோகன்(Erdogan)தெரிவிக்கையில், நீங்கள் எல்லை மீறி செல்வதாக இருந்தால், ஒரு நாள் இரவு நாங்கள் திடீரென்று வருவோம், அதற்கான விலை மிக அதிகமாக இருக்கும் என்றார்.

இந்த நிலையில், முன்னாள் கிரேக்க தளபதி ஒருவர் தெரிவிக்கையில், 2019 முதல் 2021 வரையில் இரு நாடுகளுக்கும் இடையே போருக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே தாம் கருதியதாகவும்,

ஆனால் தற்போதைய சூழலில் அந்த உறுதியை தம்மால் அளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி, ஒரு போருக்கான சூழலை திட்டமிட்டு உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய சூழல் பலவீனமடைந்துள்ளதாகவும், சமாளித்துவிடும் நம்பிக்கை இருப்பதாகவும் ஏதென்ஸில் உள்ள துருக்கியின் உயர்மட்ட இராஜதந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1996ல் இருந்தே மக்கள் வசிக்காத கிரேக்க தீவுகளை துருக்கி குறிவைத்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு, மக்கள் வசிக்கும் கிழக்கு ஏஜியன் தீவுகளின் மீது கிரேக்க இறையாண்மையை வெளிப்படையாக மறுக்கத் தொடங்கியது.

இதனிடையே ஏஜியன் கடற் பகுதியில் இராணுவத்தை குவிக்கும் நடவடிக்கைகளை கிரேக்கம் கைவிட வேண்டும் என ஜூன் மாதம் எர்டோகன்(Erdogan) கோரிக்கை வைத்துள்ளார்.

அது மட்டுமின்றி, ஏஜியன் பகுதியில் படையெடுக்கும் சூழல் உருவாகும் என ஆகஸ்டு மாதம் அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மேலும், நீங்கள் ஆக்கிரமித்துள்ள தீவுகள் எங்களை கட்டுப்படுத்தாது, நேரம் வரும்போது தேவையானதை நாங்கள் செய்வோம் எனவும் அவர் வெளிப்படையாக எச்சரித்தார்.

 

Kidhours – Another World Crisis

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.